‘நான் முதல்வன்’ திட்டத்தில் குடிமைப்பணித் தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு ரூ.7500 மாதந்தோறும் ஊக்கத்தொகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

‘நான் முதல்வன்’ திட்டத்தில் குடிமைப்பணித் தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு ரூ.7500 மாதந்தோறும் ஊக்கத்தொகை

சென்னை,ஆக.3- தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக குடிமைப்பணிகளுக்கானத் தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ரூ.7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் பயனாளர்கள் 10.09.2023 அன்று நடைபெறவிருக்கும் மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாண வர்களுக்கு மாதம் ரூ.7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.08.2023 <https://nmcep.tndge.org> இணைப்பின்மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு : 9043710214 / 9043710211 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், <https://naanmudhalvan.tnschools.gov.in> என்ற இணையதளப் பக்கத்தில், நாடு முழுவதும் உள்ள படிப்புகள், கல்லூரிகள், நுழைவுத் தேர்வுகள், உதவித் தொகை, கல்விக் கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகி யவை குறித்த தகவல்கள் விரிவாக இருக்கின்றன.

மாணவர்கள் எமிஸ் எண் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். மாணவர்கள் பயன் பெறுவது தவிர்த்து, பெரியவர்கள் வழிகாட்டியாகவும் தன்னார்வலராகவும் செயல்படலாம் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர் வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதே Ôநான் முதல்வன்Õ திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அரசு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் ஒற்றைச் சாளர முறை யில் எளிதாக கல்விக் கடன் பெறுவது குறித்த வழிமுறைகள் இங்கு கொடுக் கப்பட்டுள்ளன. இங்கு கொடுக்கப்பட் டுள்ள வித்யா லட்சுமி இணைய முகப்பின் வாயிலாக இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் மூன்று படிநிலைகளில் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க முடியும். பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து, பதிவு செய்ய வேண்டும். தேவையான அனைத்து விவரங் களையும் பதிவு செய்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இறுதியாக, தேவை மற்றும் தகுதிக்கு ஏற்ப வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்புகள் என்னென்ன என்ற விவரங்களும் நான் முதல்வன் வழிகாட்டி பக்கத்தில் கொடுக்கப்பட் டுக்கிறது. இதில், ஒவ்வொரு வேலை குறித்த சிறிய விளக்கம், அதற்குத் தேவைப்படும் கல்வித் தகுதிகள், தேவை யான திறன்கள், பணிசார் முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த விவ ரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

கல்வித்துறையில் தமிழ்நாடு அரசு சிறப்பான பணிகளை மாற்றி வருகிறது வேலை வாய்ப்புக்கான கதவுகளையும் திறந்து விடுகிறது பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து பயிற்சி நிலை யங்களுக்கு சென்று பயிற்சி பெறுவது என்பது சாதாரண மக்களுக்கு ஆகக் கூடிய காரியம் அல்ல இந்த நிலையில் தமிழ்நாடு அரசு உதவித் தொகை கொடுத்து ஊக்குவிப்பது பாராட்டுத் தக்கது வரவேற்கத்தக்கது இதனை நம்முடைய இளைஞர்கள் தக்க வகை யில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கல்வி புரட்சி ஓங்கட்டும் ஓங்கட்டும் என்கிற முழக்கம் இளைய தலைமுறையினரிடமிருந்து ஒலித்துக் கொண்டி ருக்கிறது.


No comments:

Post a Comment