திராவிடர் கழகமாம் தாய் கழகத்தின் சார்பில் 2023 அக்டோபர் 6 தஞ்சாவூர் திலகர் திடலில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா மிக எழுச்சியோடு நடைபெற உள்ளது. தி.மு.க தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை.சந்திர சேகரன், திமுக தஞ்சை மாநகர செயலாளர் மேயர் சண். இராமநாதன், திமுக மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, திமுக தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, திமுக ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.கார்த்திகேயன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தமிழ்செல்வன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் ஆகியோர் 23-8-2023 அன்று இரவு 8.30 மணிக்கு தஞ்சை வல்லத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து விழா ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். மாநாடு போல் மக்கள் கடலில் விழாவினை மிக எழுச்சியுடன் நடத்திடுவோம் என உறுதி அளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment