சிதம்பரத்தில்‌ பெரியாரியல் பயிற்சிப் பட்டறை! 66 மாணவர்கள் பங்கேற்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 27, 2023

சிதம்பரத்தில்‌ பெரியாரியல் பயிற்சிப் பட்டறை! 66 மாணவர்கள் பங்கேற்பு!

சிதம்பரம், ஆக. 27- திராவிடர் கழகத்தின் சார்பில் சிதம்பரம் கழக மாவட்டம், புஷ்பா பொன்னுசாமி திருமண மண்டபத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நேற்று (26.08.2023)  நடைபெற்றது!

நிகழ்விற்கு மாவட்டத் துணைத் தலை வர் கோவி.பெரியார்தாசன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் மு.தெ ன்னவன்,  மாவட்டத் துணைச் செய லாளர் கா.கண்ணன், பகுத்தறிவாளர் கழ கத் தலைவர் கோவி.நெடுமாறன், துணைத் தலைவர் இரா.திருமாவளவன், செயலா ளர் அ.செங்குட்டுவன், நகரத் தலைவர் கோவி.குணசேகரன், மகளிரணி தலைவர் பெ.சுமதி ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி.சிலம்பரசன் வரவேற்க, கழகப் பேச்சாளர் சி.யாழ்திலீபன் தொடக்கவுரை யாற்றினார்.

திராவிடர் கழகக் கிராமப் பிரச்சார மாநில அமைப்பாளர் முனைவர் க. அன் பழகன் "தந்தை பெரியார் ஒர் அறிமுகம்" என்கிற தலைப்பிலும், திரா விடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு "பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு" என்கிற தலைப்பிலும் வகுப்பெடுத்தனர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் "தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் சாதனைகள்" எனும் தலைப்பிலும், பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு தலை வர் மா. அழகிரிசாமி "சமூக ஊடகங்களில் நமது பங்கு" எனும் தலைப்பிலும் வகுப் பெடுத்தனர்.

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் "தந்தை பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள்" என்கிற தலைப் பிலும், திராவிடர் கழகத் தொழில் நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி. வில்வம் "ஊடகத் துறையில் தடம் பதித்த திராவிடர் இயக்கம்" என்கிற தலைப்பிலும் வகுப்பெடுத்தனர்.

இறுதி வகுப்பாகத் திராவிடர் கழக சொற்பொழிவாளர் பேச்சாளர் வழக்குரை ஞர் பூவை.புலிகேசி "கடவுள் மறுப்புத் தத்துவ விளக்கம்" என்னும் தலைப்பில் வகுப்பெடுத்தார்.

பயிற்சிப் பட்டறைக் குறித்த ஒருநாள் அனுபவத்தையும், தாங்கள் கற்றுக் கொண்டது குறித்தும் மாணவர்கள் தங் கள் கருத்துகளை வெளிப்படுத்தினர்.

பயிற்சி வகுப்புகளைச் சிறப்பாகக் கவ னித்துக் குறிப்பெடுத்த அய்வருக்கு நூல் கள் பரிசாக வழங்கப்பட்டன. முறையே சு.மோனிஷ், சி.சஞ்சனா, எம்.தர்ஷினி, ம.மதிவதனி, முகமது அயூப் ஆகியோர் பரிசுகளை வென்றனர்.

மொத்தம் 66 மாணவர்கள் பங்கேற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையில் 40 பெண் கள், 26 ஆண்கள் கலந்து கொண்டனர்.

போர்ச்சுகல் நாட்டில் இருந்து பெரியா ரியல் பயிற்சிப் பட்டறையை வாழ்த்தியும், மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தும், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தொலைப்பேசி மூலம் பேசினார்.

நிறைவாகப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்த தோழர்க ளையும், பங்கேற்ற மாணவர்களையும் பாராட்டி திராவிடர் கழகம் மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் உரை யாற்றினார்.

நிகழ்வில் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் யாழ். சுபா, புவனகிரி தி.சு.பழனி யாண்டி, திருமுட்டம் ஒன்றியத் தலைவர் க.பெரியண்ணசாமி, ஆண்டிபாளையம் அறிவுமணி, பரங்கிப் பேட்டை ஒன்றியச் செயலாளர் துரை.செயபால், விருதுநகர் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, ஆனந்த பாரதி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களும், கழகப் பொறுப்பா ளர்களும் இறுதியில் குழுப் படம் எடுத்துக் கொண்டனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் பஞ்சநாதன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment