மும்பை, ஆக.1 வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 66 விழுக்காட் டினர் வளைகுடா நாடுகளில் வசிப்ப தாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
நாக்பூரை சேர்ந்த வங்கி அதி காரியான அபய் கோலார்கர் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வர்கள் குறித்த தகவலை கேட்டு இருந்தார். இதையேற்று கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான தரவுகளை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. இதன்படி மொத் தம் 210 நாடுகளில் இந்தியாவை சேர்ந்த 1 கோடியே 34 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களின் 88.8 லட்சம் பேர் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர். இது மொத்த எண்ணிக்கையில் 66 சதவீதமாகும். இதில் 34.1 லட்சம் பேர் அய்க்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியாவில் 25.9 லட்சம் பேரும், குவைத்தில் 10.2 லட்சம் பேரும், கத்தாரில் 7.4 லட்சம் பேரும், ஓமனில் 7.7 லட்சம் பேரும், பக்ரைனில் 3.2 லட்சம் பேரும் வாழ்கின்றனர். இதைதொடர்ந்து அமெரிக்காவில் 12.8 லட்சம் பேரும், இங்கிலாந்தில் 3.5 லட்சம் பேரும், ஆஸ்திரேலி யாவில் 2.4 லட்சம் பேரும், மலேசி யாவில் 2.2 லட்சம் பேரும், கனடாவில் 1.7 லட்சம் பேரும் வசிக்கின்றனர். அதேநேரம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் அமெரிக்காவில் தான் உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 31 லட்சம் பேர் உள்ளனர். மலேசியாவில் 27.6 லட்சமும், மியான்மரில் 20 லட்சமும், இலங்கையில் 16 லட்சமும், கனடா வில் 15.1 லட்சமும் இந்திய வம்சா வளியை சேர்ந்தவர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment