இந்தநிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதா ரர்கள் பற்றிய விவரம் வருமாறு:
பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 94 ஆயிரத்து 630; பெண் களின் எண்ணிக்கை 35 லட்சத்து 60 ஆயிரத்து 846; மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 290, என மொத்தம் 66 லட்சத்து 55 ஆயிரத்து 766 பேராகும்.
அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 16 லட்சத்து 87 ஆயிரத்து 537 பேர். 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 53 ஆயிரத்து 916 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 51 ஆயிரத்து 474 பேர்.46 முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 56 ஆயிரத்து 68 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,771 பேர் உள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 284 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment