பெரியார் விருதாளர் கலைமாமணி நாடகவேள் மா.வீ.முத்துவின் தஞ்சாவூர் காவேரி அன்னை கலைமன்ற 53ஆவது நாடகப் போட்டி விழா - 2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 6, 2023

பெரியார் விருதாளர் கலைமாமணி நாடகவேள் மா.வீ.முத்துவின் தஞ்சாவூர் காவேரி அன்னை கலைமன்ற 53ஆவது நாடகப் போட்டி விழா - 2023


தஞ்சாவூர்,ஆக.6 - தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில், தமிழ்நாட்டின் சிறந்த நாடக மன்றத் திற்கான தமிழ்நாடு அரசின் விருது பெற்ற தஞ்சாவூர் காவேரி அன்னை கலைமன்றத்தின் 56 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு 53ஆவது நாடகப் போட்டி விழா - 2023, 28.07.2023 முதல் 08.08.2023 முடிய 12 நாள்கள் நடை பெறுகிறது.

ஒரு நாளைக்கு இரண்டு நாடகங்கள் என 24 நாடகங்கள் இந்த நாடகப் போட்டி விழாவில் அரங்கேற்றப்படுகின்றன.

8ஆவது நாள் நிகழ்வாக 04.08.2023 அன்று மலை 7.30 மணியளவில் புதுச் சேரி கலைசித்ரா கலைக்குழுவினரின் "சட்டம் என் கையில்" என்ற சமூக நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இன்றைய தேவை சனாதன தர்மமா? தந்தை பெரியாரின் சமூகநீதி கொள்கையா? என்பதை மய்ய கருவாகக் கொண்டு இன்றைய ப.ஜ.க. ஒன்றிய அரசு சமூக நீதிக்கும், ஜனநாயகத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுவதையும், இதற்குத் தீர்வு தந்தை பெரியாரின் சமூகநீதி, பெண் உரிமை சிந்தனைகள் தான் தீர்வு எனவும் தந்தை பெரியார் சிலை - தந்தை பெரியார் நகர் என்ற காட்சிகளுடன் புதுச்சேரி அருணா கலைமணி கதை வசனம் இயக்கத்தில் நடைபெற்ற இந்த சமூக நாடகத்தின் அரங்கேற்று விழாவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் தஞ்சை காவேரி அன்னை கலைமன்ற இணை செயலாளர், கலையரசு பரசை.பாலா வரவேற்று உரையாற்றினார்.

தஞ்சை மாவட்ட கழக தலைவர், காவேரி அன்னை கலை மன்றத்தின் சட்ட ஆலோசகர், வழக்குரைஞர் 

சி.அமர்சிங் நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார்.தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன் முன்னிலையேற்று உரையாற்றினார்.

மாநில கழக கலைத்துறை செய லாளர் ச.சித்தார்த்தன், தமிழ் தடம் வலைக்காட்சி நிறுவநர், மாநில ப.க. ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரி சாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், பாபநாசம் திராவிடர் சமுதாய நலக் கல்வி அறக்கட்டளை பொறுப்பாளர் க.திருஞானம் ஆகியோர் கலந்து கொண்டு சமூக அவலங்களை தோலு ரித்துக் காட்டிய கலைக்குழுவினரைப் பாராட்டி உரையாற்றினர்.

மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கலந்துகொண்டு தொடர்ந்து 53 ஆண்டுகளாக நாடக விழாவினை நடத்தி, அதில் கலை வாணர், நடிகவேள் எம்.ஆர்.இராதா போன்றவர்களை தொடர்ந்து மேடை நாடகங்களின் வாயிலாக தந்தை பெரி யாரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை வாழ்நாள் பணியாக மேற்கொண்டுள்ள, திரா விடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களால் பெரியார் விருதும், நாடகவேள் என்ற பட்டமும் வழங்கி கவுரவிக்கப் பட்ட, கலைமாமணி மா.வீ.முத்துவை ஊக்கப்படுத்தியும், இது போன்ற நாடக கலை மேன்மேலும் வளரவேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்புரை யாற்றினார்.

இறுதியாக தஞ்சை காவேரி அன்னை கலைமன்ற செயலாளர் அருணா.மோகன் நன்றியுரையாற் றினார்.

திராவிடர் கழக மாநில இளை ஞரணி துணை செயலாளர் முனைவர் வே.ராஜவேல். திராவிடர் கழக மகளிர் அணி பொறுப்பாளர் அ.கலைச்செல்வி. தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், 

தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன், அ.சாக்ரடீஸ், உரத்தநாடு ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மன்றோ மதி யழகன், தஞ்சை மாநகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.வீரக்குமார் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பொதுமக்கள் நாடக ரசிகர்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment