நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
நாமக்கல்,ஆக.3- கோவையைச் சேர்ந்த முதியவருக்கு எய்ட்ஸ் உள்ள தாக தவறாக தெரிவித்த தனியார் கண் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அப ராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (71). கடந்த 2017 டிசம் பர் மாதம் கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் கண் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் கண்களை பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு முன் ரத்தம் மற் றும் சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனை களை செய்யும்படி அறிவுறுத்தியுள் ளார். இந்த பரிசோதனைகள் அம் மருத்துவமனையில் மேற்கொள்ளப் பட்டது. இதன் முடிவில் அவருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதாக மருத் துவமனை நிர்வாகம் மூலம் தெரி விக்கப்பட்டுள்ளது.
இதில் அதிர்ச்சியடைந்த கிருஷ் ணசாமி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மற் றொரு தனியார் மருத்துவமனையிலும் ரத்தப் பரிசோதனை செய்து பார்த் துள்ளார். இதில் அவருக்கு எய்ட்ஸ் நோய் எதுவும் இல்லை என மருத்துவ அறிக்கையை வழங்கி உள்ளனர். இத னால் பாதிப்புக்கு உள்ளான கிருஷ்ண சாமி கடந்த 2018ஆம் ஆண்டு கோவை நுகர்வோர் நீதிமன் றத்தில் தனியார் கண் மருத்துவமனைமீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விரை வான விசா ரணைக்காக கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்திற்கு மாற்றப் பட்டது. வழக்கு விசாரணை நிறை வடைந்த நிலையில் வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி கவனக்குறைவுடன் செயல் பட்ட தனியார் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வீ.ராமராஜ் உத்தரவிட்டார். இந்த அபராதத் தொகையை 4 வார காலத் திற்குள் வழக்கு தொடர்ந்த கிருஷ்ண சாமிக்கு வழங்க வேண்டுமெனவும் உத்தர விட்டார்.
No comments:
Post a Comment