வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 6, 2023

வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஆக.6 கலைஞர் நூற்றாண்டு விழாவினைக் கொள்கைத் திருவிழாவாகக் கொண்டாட வேண் டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்களை  கேட்டுக் கொண்டுள்ளார். 

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில்,  காணொலிக் காட்சி வாயிலாக நேற்று (5.8.2023) நடை பெற்றது. அதில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

"கலைஞர் நூற்றாண்டு விழாவை, அவருக்குப் புகழ் சேர்க்கும் விழாவாக, பெருமை சேர்க்கின்ற விழாவாக கொண்டாட வேண்டும். அதைவிட முக்கியமாக அவரின் கொள்கைகளை பரப்புகிற விழாவாக, மக்கள் பயன்பெறும் விழாவாக கொண்டாட வேண்டும். இது போன்ற விழாக்களின் மூலமாகத்தான் கழகத் தொண்டர் களுக்கு உற்சாகம் பிறக்கிறது. நமக்கு நாமே உணர்ச்சியை பெறுகிறோம்.

கலைஞர் நூற்றாண்டு விழா  என்றால், அதுவும் தேர்தல் பரப்புரை யில் ஒரு அங்கம்தான். கலைஞர் பெயரைச் சொல்லி பொதுமக்களின் கவனத்தை நம்மை நோக்கி ஈர்த்தாக வேண்டும். மக்களை ஈர்க்க கலைஞரே காந்தம்போல் நமக்கு உதவுவார். அவரால் பயன்பெறாத தரப்பினரே இல்லை. 

அதனால், அந்த அடிப்படையில் கொள்கை விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராகி விட்டோம். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் 40-க்கு 40 இடங்களையும் தி.மு.க தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் வகையில் நம்முடைய பரப்புரையை தொடங்கியிருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி தோறும் களப்பணியாற்றும் வகையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர் களின் தீவிரமான களப்பணிதான் கழகத்தின் மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். கழகத்தின் வியூகத்தை வெற்றியடையச் செய் வது உங்கள் ஒவ்வொருவரின் கடமை. எனவே, வாக்குச்சாவடி பொறுப்பாளர் கள் உறுப்பினர்கள் நியமனம் மற்றும் அவர்கள் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். 

வாக்குச்சாவடி பொறுப்பாளர் களுக்கான பாசறைக் கூட்டங்களை நடத்துவதோடு நம்முடைய வேலை முடிந்துவிடாது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையின் தொடக் கம் மட்டும்தான் அது. அதனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பணிகளையும் தொடங்கவேண்டும். கழகத்தின் சாதனைகள் மற்றும் கழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத் துச் செல்வதற்கான கருவியாக வாக் குச்சாவடி பொறுப்பாளர்கள் செயல் பட வேண்டும்.   பாஜகவை பொறுத்த வரையில் இது அவர்களுக்கு வாழ்வா சாவா என்ற தேர்தல். மீண்டும் ஆட் சியைப் பிடிக்க எதையும் செய்வார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து இருக்கிறது. அதனால் கோபம் அதிகமாகும். நம்மை நோக்கிப் பாய்வார்கள். 

கடந்த காலங்களில், இதுமாதிரி பல தடைகளை சமாளித்துத்தான் நம்மு டைய கழகம் வெற்றி பெற்று இருக் கிறது. இந்த முறையும் நாம் முழு மையான வெற்றியைப் பெற வேண் டும். அதற்காக அனைவரும் ஒன் றிணைந்து உழைப்போம்" என்று உரையாற்றினார்.

No comments:

Post a Comment