சந்­தி­ர­யான்-3 திட்ட இயக்­கு­நர் வீர­முத்­து­வேலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலை­ப்பே­சி­யில் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 24, 2023

சந்­தி­ர­யான்-3 திட்ட இயக்­கு­நர் வீர­முத்­து­வேலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலை­ப்பே­சி­யில் வாழ்த்து!

சென்னை,ஆக.24- சந்­தி­ர­யான் - 3 விண்­க­லம் நில­வின் தென் துரு­வத்­தில் தரை­யி­றக்­கப்­பட்ட சாத­னை­யை­ய­டுத்து, அதன் திட்ட இயக்­கு­நர் விழுப்­பு­ரத்தை சேர்ந்த வீர­முத்­து­வேல் அவர்­களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலை­ப்பே­சி­யில் தொடர்பு கொண்டு தனது மன­மார்ந்த வாழ்த்­துக்களைத் தெரி­வித்­துள்­ளார்.

இது குறித்த முதலமைச்சர் அவர்களின் உரையாடல் வருமாறு:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : வாழ்த்­துகள்.. வாழ்த்­துகள்.. சந்­தி­ர­யான் விண்­க­லம் வெற்றி பெற்­றதன் மூலம் தமிழ்­நாட்­டுக்கு மட்­டு­மல்ல, இந்­தி­யா­வுக்கே உலக அள­வில் பெருமை தேடிக்கொடுத்திருக்கிறீர்கள்.

திட்ட இயக்­கு­நர் வீர­முத்­து­வேல் : ரொம்ப மகிழ்ச்சி  சார்.. ரொம்ப சந்­தோ­ஷம்

முதலமைச்சர் :  விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் உள்ள உங்­கள் அப்­பா­வின் பேட்­டியை பார்த்­தேன். அவர் ரொம்­ப­வும் பெரு­மைப்­பட்­டுள்­ளார். நீங்­கள் தமிழ்­நாட்­டுக்கு வரும் போது எனக்கு தக­வல் மட்­டும் சொல்­லுங்­கள். நான் உங்­க­ளைச் சந்­திக்­கி­றேன்.

வீர­முத்­து­வேல் : எஸ் சார். ரொம்ப சந்­தோ­ஷம் சார்.

முதலமைச்சர் : கட்­டா­யம் சந்­திக்­கி­றேன். வாழ்த்­துகள். எல்­லோ­ருக்­கும் வாழ்த்­துகளை சொல்­லுங்க..

வீர­முத்­து­வேல் : ரொம்ப மகிழ்ச்சி சார். வாழ்த்­துகளை எல்­லோ­ருக்­கும் சொல்­கி­றேன் சார். நீங்க கால் பண்­ணி­ன­துக்கு ரொம்ப சந்­தோ­ஷம் சார். உங்­க­ளோட சர்­வீஸ் எல்­லாம் எங்­க­ளுக்கு ரொம்ப பிடிச்­சி­ருக்கு சார். ரொம்ப சந்­தோ­ஷம் சார்.

முதலமைச்சர் : ரைட்... ­ரைட்....

வீர­முத்­து­வேல் : ரொம்ப மகிழ்ச்சி சார். நீங்­கள் எனக்கு போன் பண்­ணி­னதே ரொம்ப சந்­தோ­ஷம் சார்.

முதலமைச்சர் : பெரிய சாதனை... பெரிய சாதனை...

வீர­முத்­து­வேல் : சார் இப்ப ரோவர் வந்து வெளி­யில இருக்கு. சந்­தி­ரயா­னோட ரோவர். அத­னால நான் எது­வும் பேச முடி­ய­வில்லை. ஏன்னா லாஸ்ட் பியூ மினிட்ஸா நான் ஆப­ரே­ஷன்ஸ்ல இருந்­த­தால எனக்கு முக்­கி­ய­மான வேலை இருந்­துச்சு. எனக்கு ரொம்ப சந்­தோ­ஷம் சார், உங்­கள் கிட்டே பேசி­ன­துக்கு.

முதலமைச்சர் : நல்­லது.. நல்­லது..

வீர­முத்­து­வேல் : தேங்க் யூ சோ மச் சார். தேங்க் யூ சோ மச்..

முதலமைச்சர் : தமிழ்­நாட்­டுக்கு வரும்­போது சொல்­லுங்க.. உங்­கள நான் மீட் பண்­ணு­கி­றேன்.

வீர­முத்­து­வேல் : ரொம்ப சந்­தோ­ஷம் சார்

முதலமைச்சர் : வணக்­கம்.


No comments:

Post a Comment