சென்னை, ஆக. 27- மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட் டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு, அவர் களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், "உத்தரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து ராமேசுவரத்திற்கு வந்த ஆன்மிக சிறப்பு சுற்றுலா ரயிலில் நாகர் கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப் பட்டு மதுரை ரயில் நிலையத்தில் 26.-8.-2023 அன்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் சமை யல் செய்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
மதுரை மாவட்ட ஆட்சியரை உடனடியாக விபத்து நடந்த இடத் துக்குச் சென்று உரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள் ளவும், காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டுசெல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வ தோடு அவர்களது குடும்பத்தி னருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த் தியை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேவையான உதவிகளை செய்திடுமாறும் கேட்டுக்கொண் டேன்" என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment