அஞ்ஞானம் தோற்றது - விஞ்ஞானம் வென்றது நிலவில் இறங்கியது நிலவுக்கலன் சந்திரயான் 3 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 24, 2023

அஞ்ஞானம் தோற்றது - விஞ்ஞானம் வென்றது நிலவில் இறங்கியது நிலவுக்கலன் சந்திரயான் 3

பெங்களூரு, ஆக 24 'சந்திர யான்-3 விண்கல விக்ரம் லேண் டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் பெங்களூரு வில் இஸ்ரோவில் அறிவியல் ஆய்வாளர்களும், பொதுமக் களும் வெற்றியை கொண் டாடினார்கள்.

நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம் (இஸ்ரோ) சார்பில் கடந்த 14-ஆம் தேதி 'சந்திர யான்-3' என்ற விண்கலம் விண் ணில் செலுத்தப்பட்டது. முதலில் பூமியின் புவிவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திர யான்-3 விண்கலம், படிப்படி யாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு மாற்றப்பட்டு, அதன் சுற்றுவட்ட பாதை குறைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து 'விக்ரம் லேண்டர்' கருவி பிரிக்கப்பட் டது. இந்த 'லேண்டர்' கருவி நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங் கியது. இந்த நிகழ்வு தொலைக் காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இந்த லேண்டரை கட்டுப் படுத்தும் தரைகட்டுப்பாட்டு மய்யம் பெங்களூரு பீனியாவில் அமைந்துள்ளது. இந்த மய்யத் தின் முன்பு நேற்று (23.8.2023) ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர்.   

'லேண்டர்' வெற்றிகரமாக தரையிறங்கியதும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் கைத்தட்டியும், ஆரவாரம் செய்தும் உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், வெளியே காத்திருந்த பொது மக்களும், வெற்றிகரமாக தரையிறங்கியதும் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த வெற்றியால், அமெ ரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா வைத் தொடர்ந்து நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4ஆ-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்த சூழலில், நிலவில் லேண்டர் பாதுகாப்பான இடம் தேடி, தேர்வு செய்து இறங்கிய விவரங்களை இஸ்ரோ வெளியிட்டது. இதன்படி, சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கும் முன்பு 150 மீட்டர் உயரத்தில் இருந்தபோது, அதற்கு நேர் செங்குத்து பகுதி யில் பள்ளம் இருந்தது கண்ட றியப்பட்டது.

இடர்பாடுகளை உணர்ந்து ஆபத்துகளை தவிர்ப்பதற்காக இணைக்கப்பட்ட கேமரா உட னடியாக செயல்பட்டு, படம் எடுத்து எச்சரிக்கை செய்தது. இது, லேண்டர் பாதுகாப்பாக தரையிறங்க உதவியதாக இஸ்ரோ தெரிவித்தது. ஆபத்து தவிர்ப்பு கேமராவில் பதிவான புகைப்படம் மற்றும் லேண்டர் பாதுகாப்பாக சற்று தள்ளி இறங்கிய படமும் வெளியிடப்பட்டது.

இதேபோன்று, நிலவில் இறங்கிய விக்ரம் லேண்டர், அதற்கு சிறிது நேரத்திற்கு முன் எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டது. லேண்டர் தரையிறங்கிய பின்னர், லேண்டிங் இமேஜர் கேமரா எடுத்த புகைப்படமும் வெளிவந்து உள்ளது. அதில், சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய ஒரு பகுதி உள்ளது. லேண்டரின் ஒரு கால் பகுதி யின் நிழலும் காணப்படுகிறது. நிலவில் சமதளப் பகுதியை தேர்வு செய்து சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கியது.

முன்னதாக, லேண்டர் தரையிறங்கியபோது, நிலவில் புழுதிப் படலம் ஏற்பட்டது. அது அடங்கிய பின்னர், லேண் டரில் இருந்து ரோவர் வெளி வந்து ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப் பப்பட்ட சந்திரயான்-3 விண் கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதில் வெற்றியடைந்தது. தொடர்ந்து, நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு தனது முதல் தகவலை அனுப்பி உள்ளது. அதில், இந்தியா, இலக்கை நான் அடைந்து விட்டேன். நீங்களும் கூட! என்று தெரிவித்து உள்ளது.

இதனால், இது ஒரு மறக்க முடியாத தருணம் என்று பெங் களூருவில் உள்ள இஸ்ரோ அறிவியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். 

நிலவு பற்றிய ஆராய்ச்சியில், ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, முன்னணியில் உள்ள இந்தியா இதுவரை, சந்திரயான்-1, சந்திர யான்-2 ஆகிய இரண்டு விண் கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர் உள்ளது என உறுதி செய்துள்ளது.

தற்போது, நிலவின் தென் துருவத்தில், இதுவரை யாரும் ஆய்வு செய்யாத இடத்தில், தடம் பதிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு, 

கடந்த மாதம் (ஜூலை) 

14-ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப் பட்டது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment