சென்னை ஆக 13 விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசை கண்டித்து செப் 7ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கட்சிஅறிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் கடுமையான விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளனர். உணவு தானியங்கள், அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகளின் விலை வாங்க முடி யாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. சமீபத்தில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 250க்கு விற்றது மக்களி டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு என சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் தாங்க முடியாத சுமையை எதிர்கொள் கின்றனர். அத்தியாவசியப் பொருட் களின் மீதான வரன்முறையற்ற சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு விலைஉயர்வுக்கான காரணங்களில் முக்கிய ஒன்றாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய பாஜ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை இந்திய மார்க்சிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
ஒன்றிய அரசு கடைபிடிக்கும் நவீன தாராளமய பொருளாதார கொள்கையே இதற்கு அடிப்படை காரணம். நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை உருவாக்கி நகர்ப்புற ஏழை களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி பிரசார இயக்கத்தை மேற்கொள்வதுடன் 2023 செப்டம்பர் 7ம் தேதி மாவட்டங்களிலும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment