சென்னை, ஆக. 2 - சந்திரயான்_-3 விண்கலம் தனது புவி சுற்றுப்பாதை பயணத்தை நிறைவு செய்து, நிலவை நோக்கி செல்லத் தொடங் கியுள்ளது. சரியான பாதையில், எதிர்பார்த்ததைவிட சீரான வேகத்தில் விண்கலம் பயணிக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய் வதற்காக சந்திரயான்-_3 விண் கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது.
ஆந்திர மாநிலம் சிறீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மய்யத்தின் ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-_3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த ஜூலை 14ஆ-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெங்களூ ருவில் உள்ள இஸ்ரோ கட்டுப் பாட்டு மய்யத்தில் இருந்து விண் கலத்தை இயக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சந்திரயான்-_3 விண்கலத்தை நிலவுக்கு நெருக்க மாகக் கொண்டு செல்ல ஏதுவாக, அதில் உள்ள உந்துவிசை இயந் திரங்கள் இயக்கப்பட்டு, அதன் புவி நீள்வட்ட சுற்றுப் பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப் பட்டது.
இதன்மூலம் குறைந்தபட்சம் 236 கி.மீ. தூரம், அதிகபட்சம் 1 லட்சத்து 27,609 கி.மீ. தூரம் கொண்ட புவி சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப் பட்டது.
இதையடுத்து, விண்கலத்தை புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலக்கி, நிலவின் ஈர்ப்பு விசை பகுதிக்குள் செலுத்தும் முயற்சி நேற்று முன்தினம் (ஜூலை 31) நள்ளிரவு 12.05 மணி அளவில் மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் சிக்கலான இப்பணியை முடித்து, சந்திரயான்-3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் ஈர்ப்பு விசை பகுதிக்குள் உந்தித் தள்ளப் பட்டது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது:
சந்திரயான் -3 விண்கலம் புவி யின் நீள்வட்டப் பாதையில் தனது பயணத்தை நிறைவு செய்து, தற் போது நிலவை நோக்கி பயணித்து வருகிறது. சரியான பாதையில், எதிர்பார்த்ததைவிட சீரான வேகத்தில் செல்கிறது.
அடுத்தகட்டமாக ஆக.5-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் விண்கலத்தை உந்தித் தள்ள திட்ட மிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, விண்கலத்தின் உயரம் படிப் படியாக குறைக்கப்பட்டு, திட்ட மிட்டபடி நிலவில் ஆக.23ஆ-ம் தேதி மிக மெதுவாக தரையிறக்கப் படும். சுற்றுப்பாதை மாற்றம் என்பது சந்திரயான்-3 விண்கல பயணத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். அது நல்லவிதமாக நிறைவடைந் துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment