திருவாரூர் - விளமலில் பகுத்தறிவு ஆசிரியரணி நடத்திய 2ஆவது தெருமுனைப் பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 9, 2023

திருவாரூர் - விளமலில் பகுத்தறிவு ஆசிரியரணி நடத்திய 2ஆவது தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர், ஆக. 9 - பகுத்தறிவு ஆசிரியர் அணி நடத்தி வரும் தொடர் தெருமுனைப் பிரச்சாரம் 2ஆம் நாள் விளமல் கல்பாலம் முக்கிய இடத்தில் நடை பெற்றது. மாநில ஆசிரியரணி ப.க. அமைப்பாளர் இரா.சிவக்குமார் தலைமையில், நகர கழக தலைவர் சவு.சுரேஷ், செயலாளர் ப.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி எஸ்.சோமு தொடக்க உரையாற்றிட சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தில் தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் க.முருகேசன் மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் து.செயலாளர் சந்திர சேகரன், ஒன்றிய பிரதிநிதி இ.வீரமணி, பி.பன் னீர்செல்வம், ஊராட்சி தி.மு.க. அவைத் தலைவர் நமச்சிவாயம், து.செயலா ளர் செந்தில் குமார், ஏ.அருள், பி.கிருஷ்ண மூர்த்தி மற்றும் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் கோ.செந்தமிழ்ச் செல்வி தலைப்புகளின் கீழ் விளக்கி உரையாற்றினார். இறுதியாக தலைமைக் கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரை யாற்றினார். வைக்கம் 100 ஆண்டு, முத்தமிழ் அறி ஞர் கலைஞர் 100 ஆண்டு, தோல் சீலைப் போராட் டம் 200ஆம் ஆண்டு விழாக்களைப் பற்றி நகைச்சுவையுடன் பேசி நாட்டில் சமூகநீதிக்கு எதிராக செயல்பட்டு வரும் பாசிச மோடி ஆட்சியின் அவலத்தை யும், மணிப்பூர் கலவரம் பற்றியும் தெளிவுபடுத் தினார். பார்வையாளர் கள் அவரது பேச்சுக்குப் பாராட்டு தெரிவித்தனர். கூட்ட துவக்கத்தில் பாவ லர் க.முனியாண்டி, புல வர் சு.ஆறுமுகம் ஆகி யோர் கொள்கைப் பாடல் களைப் பாடினர். மாவட்ட திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர் கோ.இராமலிங்கம் நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment