தேர்தல் தேதி அறிவிக்கும் முன் னரே பாஜக 39 பேர்களைக் கொண்ட தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டு, தேர் தல் வேலைக ளைத் துவக்கியுள்ளது. இந்நிலையில்தான், கடந்த 18 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவிற்கு பாஜக ஊழல் செய் துள்ளதாக காங்கிரஸ் கட்சி பட்டியலிட்டுள்ளது.
இதுதொடர்பாக ம.பி. காங் கிரஸ் தலைவர் கமல்நாத் கூறியிருப்பதாவது:
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 18 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் மெகா ஊழல்கள் நடந்துள்ளன. கூகுளில் ‘ஸ்கேம்’ என்று தேடினால், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவு கான் படம் தான் வரும் அளவுக்கு ஊழல் மலிந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிவராஜ் சிங் சவுகான் அரசு, அதன் 18 ஆண்டு கால ஆட்சியில் மோசடிகளில் உலக சாதனை படைத்துள்ளது.
பட்டியல் மிக நீளமானது. ஆனால் காங்கிரஸ் கட்சி சில மெகா ஊழல்களை மட்டுமே பட் டியலிட்டுள்ளது. 50 சதவிகித கமிஷன் ராஜ்ஜியம் மாநிலத்தை ‘ஊழல் மாநிலமாக’ மாற்றியுள்ளது. 2018 மற்றும் 2020-க்கு இடையில் எனது ஆட்சிதான் நடந்தது. அப் போது, ஊழல் முறைகேடுகளை விசாரிப்பதை விட, மத்தியப் பிர தேசத்தை முதலீட்டாளர்களின் மய்யமாக மாற்று வதில் கவனம் செலுத்தினேன்.
2019 மக்களவை தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகளின் காரண மாகவும் இரண்டரை மாதங்கள் வீணாகிவிட்டது.
ஆனால் ம.பி. பாஜக ஆட்சியில் பிரபல வியாபம் ஊழல் (ரூ. 2,000 கோடி), சட்ட விரோத சுரங்கம் (ரூ. 50 ஆயிரம் கோடி), இ-டெண்டர் ஊழல் (ரூ. 3 ஆயிரம் கோடி), ஆர்.டி.ஓ. ஊழல் (ரூ. 25 ஆயிரம் கோடி), மது பான ஊழல் (ரூ. 86 ஆயிரம் கோடி), மகாகல் லோக் ஊழல் (ரூ. 100 கோடி), மின்சார ஊழல் (ரூ. 94 ஆயிரம் கோடி) உள்பட 254 ஊழல்கள் மூலம் ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி மோசடி நடந் துள்ளது. இவ்வாறு கமல்நாத் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment