உயர் கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றவர்கள் கடந்த ஆண்டு 26 மாணவர்கள்; இந்த ஆண்டு 225 மாணவர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

உயர் கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றவர்கள் கடந்த ஆண்டு 26 மாணவர்கள்; இந்த ஆண்டு 225 மாணவர்கள்!

இதுதான் திராவிட மாடல்!



"கல்வியைத் தனியாருக்குக் கொடுத்து விட்டார்கள்; டாஸ்மாக்கை அரசு நடத்துகிறது" என்று பொத்தாம்பொதுவாக அரைவேக்காட்டுத் தனமாக ஒரு குற்றச்சாட்டை வைப்பார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு மிகவும் பின் தங்கிய பகுதிகள் உள்பட நடத்திக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளில் இலவசமாகக் கல்வியும், பிற வசதிகளும் வழங்கப்படுவதைப் பற்றி கொஞ்சமும் வெளிச்சம் போட்டுக்  காட்ட மாட்டார்கள்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் அவர்களை மட்டம் தட்டுவதிலும், அதில் எங்கோ நடக்கும் ஓரிரு பிரச்சினைகளைப் பூதாகரமாக்கிக் காட்டுவதும் ஊடகங்களின் பாணி! ஆனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மேம்பாட் டுக்காக தமிழ்நாட்டை ஆளும் திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வரும் அளப்பரிய திட்டங்கள், செயல்பாடுகள் பெருக் கெடுத்துப் பாய்கின்றன. எத்தனை எத்தனை திட்டங்கள்?

"இந்த ஆட்சி உயர்கல்வியின் பொற் காலமாக இருக்கும்" என்று சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப் பேற்ற காலத்திலேயே அறிவித்தது வெறும் வாய்ப் பேச்சு அல்ல; அதன் செயல் வீச்சு எத்தகையது என்பதை இன்று அதன் சாதனைப் பட்டியல் காட்டுகிறது.

நமது வரிப்பணத்தில் ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங் களில் தமிழ் நாட்டு மாணவர்களின் பங்கேற்பு குறைவாகவே இருக்கிறது என்று பெருங்குறை கல்வியாளர்களால் பல நேரம் சுட்டிக்காட்டப் பட்டது உண்டு. அதைப் போக்கும் வகையில் திட்டமிட்டுச் செயலாற்றியதன் விளைவு கடந்த ஆண்டு 26 அரசுப் பள்ளி மாண வர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெற் றார்கள் என்ற நிலை பன்மடங்காகி, இதோ இந்த ஆண்டு 225 தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருக்கிறார்கள்.

இது மட்டுமல்ல, ஒன்றிய அரசின் உயர் அதி காரப் பதவிகளுக்கான யு.பி.எஸ்.சி தேர்வில் தமிழ்நாடு மாணவர்களுக்கான தனித்திட்டம், உதவித் தொகை, பயிற்சி, வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும் ஆய்வு மாணவர் களுக்கான உதவித்தொகை, வழிகாட்டல், நெறிப் படுத்தல் என தொடர் செயல்பாடுகளைத் தமிழ் நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, தொழி லாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத்துறை அமைச்சகங்கள், சிறப்புத் திட்ட இயக்குநர் மூலம் முடுக்கி விட்டு முதலமைச்சர் ஆற்றியிருக்கும் அரும்பெரும் சாதனைக்கு ஒரு சான்று இது!

இதோ கடந்த ஆண்டிலும், இந்த ஆண்டி லும் அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறு வனங்களில் இடம் பெற்றுள்ளது தொடர் பான புள்ளி விவரம். பார்த்து மகிழுங்கள்! அரசைப் பாராட்டி மகிழ்வோம்.

தொடரட்டும், தொடரட்டும் 'திராவிட மாடல்' அரசின் சாதனைச் சரித்திரம்!!! நடக்கட்டும் நடக் கட்டும் சமூகநீதிப் புரட்சி!!


No comments:

Post a Comment