கோட்டாநகர், ஆக. 19 ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில், நீட், அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு பயிற்சி பெற்று வந்த 22 மாணவர்கள் கடந்த ஓராண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அய்.அய்.டி., என்.அய்.டி. உள் ளிட்ட ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறு வனங்களில் பொறியியல் படிப்பு களில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதேபோல், மருத்துவக் கல்வி பயில்வதற்கு நாடு முழுவதும் நீட் தேர்வை ஒன்றிய அரசு நடத்தி வரு கிறது. இத்தேர்வுகள் மூலம் ஆதாயம் பெறும் நோக்கில் நாடு முழுவதும் பல தனியார் நிறுவனங்கள் பயிற்சி மய்யங்களை நடத்தி வருகின்றன. இதற்காக லட்சக்கணக்கான ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ராஜஸ்தானில் உள்ள கோடா நகர் இப்பயிற்சி மய்யங்களின் மய்யமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், கோட்டா நகரில், அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு பயிற்சி பெற்று வந்த பீகாரைச் சேர்ந்த பால் மிகி ஜாங்கிட் என்ற 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண் டுள்ளார்.
இதேபோல், கோட்டா நகரில் தங்கி அய்.அய்.டி. நுழைவுத்தேர் வுக்குத் தயாராகி வந்த பீகாரின் சம் பரன் மாவட்டத்தைச் சேர்ந்த மிஸ்ரா என்ற மாணவரும், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் நகரைச் சேர்ந்த மஞ்சோத் சாப்ரா என்ற மாணவரும் 10 நாள்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டனர்.
நீட், ஜேஇஇபோன்ற நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்களின் தலைநகராக அறியப்படும் கோட்டா நகரில், நடப்பாண்டில் மட்டும் 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது தற்போது அம்பலமாகி அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
No comments:
Post a Comment