புதுடில்லியில் நடை பெற்ற ஜி20 தேர்வு இணைப்பு அமர்வில், சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தரப்பிரதேச மேனாள் முதல மைச்சருமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், உத்தரப் பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பல ஜி20 நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. ஆனால் மணிப்பூரில் ஏன் எந்த நிகழ்வும் நடத்தப் படவில்லை?. இந்த நிகழ்வு களின் ஆதாயத்தை பா.ஜ.க. எடுக்க விரும்பினால் இந்த நிகழ்வுகளுக்கு பா.ஜ.க. நிதி யுதவி அளிக்க வேண்டும். அர சாங்கம் மற்றும் வரி செலுத்து வோர் ஏன் நிதியுதவி செய்ய வேண்டும்? மணிப்பூரில் நிலைமை பரவாயில்லை என்று அரசாங்கம் கூறுகிறது, அப்படி என்றால் மணிப்பூரில் ஜி20 நிகழ்ச் சியை நடத்த வேண்டும். டில்லியில் நடை பெறும் நிகழ்வுகளில் தங் களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் மணிப்பூர் இப் போது ஒரு பெரிய பிரச் சினை!
நாட்டில் ஒரு மாநிலம் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்றால், அங்கு ஏன் ஜி20 நிகழ்ச்சி நடைபெறவில்லை?. பா.ஜ.க. மணிப்பூரில் ஜி20 நிகழ்ச் சியை நடத்தி, நிலைமை சரியாக உள்ளது என்பதை உலகுக்கு காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந் திர மோடி, எதிர்க்கட்சிகளின் மி.ழி.ஞி.மி.கி. கூட்டணியை திமிர்பிடித்த வர்கள் என்றும், பா.ஜ.க., எதிர்க்கட்சி தலைவர்கள் மீது சுமத்தும் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் குற்றச் சாட்டுக்கள் குறித்தும் அகிலேஷ் யாதவ் பதிலளிக்கையில் கூறுகை யில், மி.ழி.ஞி.மி.கி. கூட்டணியை திமிர் பிடித்தவர்கள் என்று அழைப்ப வர்கள் தான் திமிர் பிடித்தவர்கள். ஜோதி ராதித்யா சிந்தியா வாரிசு அர சியலில் ஈடுபடவில்லையா? நான் வளர்ந்த மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் குடும்ப அரசியலால் தான் யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதலமைச்சரானார். வாரிசு அரசியல் விவகாரத்தில் நான் இரண்டு பெயர்களை மட் டுமே குறிப்பிட்டேன், ஆனால் என்னால் ஒரு பட்டியலையே தர முடியும். நாடாளுமன்ற உறுப்பி னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கள், நியமனம் செய்யப்படவில்லை. நாங்கள் வேட்பாளர்களுக்கு போட் டியிட வாய்ப்புதான் கொடுக்க முடியும், ஆனால் அவர்கள் மக் களால் தேர்ந் தெடுக்கப்பட்ட வர்கள். பா.ஜ.க. தனது தவறுகளை மறைக்க முயற்சிக்கக் கூடாது. இன்று இந்தியாவின் மிகப் பெரிய வாரிசு கட்சி பா.ஜ.க. தான். இவ் வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment