வராக் கடன் என்ற பெயரில் ரூ.2,09,000,00,00,000 (ரூ.2.09 லட்சம் கோடி) கார்ப்பரேட் கொள்ளை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 2, 2023

வராக் கடன் என்ற பெயரில் ரூ.2,09,000,00,00,000 (ரூ.2.09 லட்சம் கோடி) கார்ப்பரேட் கொள்ளை

தள்ளுபடி செய்யப்பட்ட அனைத்து வராக் கடன்களும் “தொழில் நுட்பத் தள்ளுபடிகள்” என்று வகைப்படுத்தப்பட்டு, பட்டியல் நீக்கம் பெற்றுள்ளன. இத்தகைய ‘தொழில் நுட்பத் தள்ளுபடிகளை’ வங்கியின் தலைமை அலுவலக மட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட மோசமான கடன்கள் என இந்திய ரிசர்வ் வங்கி வரையறுக்கிறது. தலைமை அலுவலகமே பட்டியல் நீக்கம் செய்துவிட்ட பின், கிளை வங்கிகளின் கணக்கியல் புத்தகங்களில் ‘வராக் கடன்களாக’ இவை இருக்குமாம். கிளை மட்டத்தில் மீட்பு முயற்சிகளும் தொடருமாம்.

புதுடில்லி, ஆக. 2 வராக் கடன்கள் மற்றும் தள்ளுபடி செய்த கடன்கள் விவகாரம் மீண்டும் டிரெண்டிங் செய்திகளாக மாறியுள்ளன. 2022-23 ஒரே ஆண்டில் வணிக வங்கிகள் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் பெற்ற  ரூ.2.09 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைத்  தளங்களில் பரபரப்பான செய்திகளாக வலம்  வருகின்றன. ஆனால் ஆளும் அரசிற்கு ஆதரவான வலதுசாரிகள், தள்ளுபடி என்பது தள்ளுபடி அல்ல என்றும், தள்ளுபடி செய்யப்பட்ட கடனை வரும் நாட்களில் திரும்பப் பெற முடியும் என்றும் வித்தியாச மாக முட்டு கொடுக்கின்றனர்.

உண்மை எப்போதும் போல  

மிகவும் சிக்கலானது

வராக் கடன்கள் என்பது 90 நாட்கள் அல்  லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு திருப்பிச்  செலுத்தப் படாத கடன்களாகும். மார்ச் 2023  நிலவரப்படி வணிக வங்கிகளின் ஒட்டு மொத்த வராக் கடன் ரூ.5.72 லட்சம் கோடியாக  உள்ளது. இது மொத்தக் கடன்களில் 3.9% என்ற மோசமான விகிதத்தில் உள்ளது. ஆனால்  மார்ச் 2018 நிலவரப்படி வராக் கடன் ரூ.10.36  லட்சம் கோடி என்ற அளவில் மொத்த கடன்  விகிதத்தில் 11.2% என்ற அளவில் இருந்த தாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 2018 நிலவரப்படி ஒப்பிட்டுப் பார்த்தால் கடந்த 5 ஆண்டுகளில் 7.3% அளவில் மொத்த வராக் கடன்கள் குறைந்துள்ளன  என்று கூறப்படுகிறது. இது எப்படி நடந்தது? உண்மையில் நான்கு ஆண்டுகளாக வராக்  கடனாக இருந்த கடன் களை, வங்கியின்  இருப்புநிலைக் குறிப்பில் இருந்தே தள்ளுபடி செய்வதன் மூலம், எல்லாம் கைவிடப்பட்டு பட்டியலே வராக் கடன் சுருக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில்  

ரூ.10.57 லட்சம் கோடி தள்ளுபடி

கடந்த அய்ந்து ஆண்டுகளில் வங்கிகள் ரூ.10.57 லட்சம் கோடி வராக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. மேலும் இந்த கால கட்டத்தில் பல புதிய மோசமான கடன்களை  (செலுத்த முடியாது என்று கருதும் கடன்)  குவித்துள்ளனர். தள்ளுபடி செய்யப் படுவதற்கு முன்பே மோசமான கடன்களையும் திரும்பப் பெற்றுள்ளனர். மேலும் தள்ளுபடி செய்யப் பட்ட அனைத்து வராக் கடன்களும் “தொழில் நுட்பத் தள்ளுபடிகள்” என்று வகைப்படுத்தப்பட்டு, பட்டியல் நீக்கம் பெற்றுள்ளன. இத்தகைய ‘தொழில்நுட்பத் தள்ளுபடிகளை’ வங்கியின் தலைமை அலுவலக மட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வராக் கடன்கள் என இந்திய ரிசர்வ் வங்கி வரையறுக்கிறது. தலைமை  அலுவலகமே பட்டியல் நீக்கம் செய்துவிட்ட பின், கிளை வங்கிகளின் கணக்கியல் புத்தகங்களில் ‘மோசமான கடன்களாக’ இவை இருக்குமாம். கிளை மட்டத்தில் மீட்பு முயற்சிகளும் தொடருமாம். இதனால், தள்ளுபடி செய்யப்பட்ட கடனை இன்னும் வசூலிக்க முடியும் என்று,  ஒன்றிய அரசாங்கத்தை ஆதரிக்கும் நபர்கள்  வித்தியாசமான கருத்துகளை கூறி திசை திருப்புகிறார்கள்.

‘கோட்பாட்டின்படி’  வேலை நடக்காது

மக்களவையில் இதுதொடர்பாக எழுப்பிய கேள் விக்கு ஒன்றிய அரசு சார்பில்  அளிக்கப்பட்ட பதிலில், ”கடன் தள்ளுபடியா னது. கடன் வாங்கியவர்களின் கடனை கணக்கியல் ஏடுகளில் இருந்து தள்ளுபடி செய்து விட்டதாக அர்த்தமல்ல; ஏனெனில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களை கடன்  வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய  பொறுப்பு உள்ளது” என கூறப்பட்டது. ஆனால் பிரச்சினை என்ன வென்றால் இந்த கோட்பாட்டில் அனைத்தும் உண் மையாக இருந்தாலும் நடைமுறையில் எந்த வேலை யும் செய்யாது. ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கூறி யதை உற்றுநோக்கினால் கடந்த மூன்று ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் மொத்த தொகை ரூ.5.87 லட்சம் கோடியாகும். ஆனால் வங்கிகள் சுமார் ரூ.1.09 லட்சம் கோடியை மட்டுமே திரும்பப் பெற்றுள்  ளன. இது தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் அய்ந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளது.  உண்மையில் 2022 டிசம்பரில் மக்கள வையில் ஒரு கேள்விக்கான பதிலில்,”2017-2018 முதல் 2021-2022 வரை பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த ரூ.7.35 லட்சம் கோடி  மதிப்பிலான கடன்களில், 1.03 லட்சம் கோடி  மதிப்புள்ள கடன்கள் மட்டுமே மீட்கப்பட்டது” என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியது. 

கடன்களை திரும்பப் பெற முடியாது 

ஆகஸ்ட் 2018 இல் வெளியிடப்பட்ட நிதி  நிலைக்குழுவின் 68-ஆவது அறிக்கையில், “2014-15 முதல் 2017-18 வரையில், பொதுத் துறை வங்கிகள் ரூ. 3.17 லட்சம் கோடி மதிப்பி லான கடன்களைத் தள்ளுபடி செய்து, வெறும்  ரூ.44,900 கோடியை வசூ லித்ததாக”ச் சுட்டிக்  காட்டியுள்ளது. கோட்பாட்டியல்படி தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களைத் திரும்பப் பெற  முடியும் என்று சொல்வது எளிதானது.  ஆனால் நடைமுறையில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் பெரும்பாலா னவை மீண்டும் தள்ளுபடி செய்யப்படு கின்றன. ஏனெனில் கடன்களை திரும்பப் பெற முடியாது.

மூத்த பத்திரிகையாளர் விவேக் கவுல், 

டெக்கான் ஹெரால்ட் (ஜூலை, 30)

தமிழில்: எம்.சதீஷ்

- தீக்கதிர், 1.8.2023

No comments:

Post a Comment