டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் ஆடையின்றி இழுத்து செல்லப்படுவது குறித்து காவல்துறை நடவடிக் கைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம். உள்ளூர் காவல்துறை விசாரிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தல்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
கடும் அமளி காரணமாக டில்லி அவசர சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
மணிப்பூர் குறித்து விவாதிக்க விரும்பாதவர்கள் மனித நேயத்துக்கு எதிரானவர்கள், அமைதிக்கு எதிரானவர்கள், இந்தியாவுக்கு எதிரானவர்கள் என மம்தா கண்டனம்.
அரியானா மாநிலம் நூஹ் நகரில் வி.எச்.பி. பேர ணியின் காரணமாக வெடித்த வகுப்புவாத வன்முறையில் மூவர் கொல்லப்பட்டனர். கலவரம் குர்கானுக்குப் பரவியது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
மக்களவையில் இந்திய அரசு அளித்த பதிலின்படி, குஜராத்தில் 2017 முதல் 2021 வரை 2,633 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 31 கூட்டு வன்கொடுமை மற்றும் கொலைகள், ஆனால் பெண்களைக் கூட்டு வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் அய்ந்து பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி டெலிகிராப்:
மணிப்பூர் வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்து மேற்கு வங்க சட்டபேவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக பீகாரில் நடைப் பயணம் மேற்கொள்ள நிதிஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம் முடிவு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
2017இல் அமைக்கப்பட்டு, 14 நீட்டிப்புகளுக்குப் பிறகு, இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான துணை ஒதுக்கீடு பற்றிய அறிக்கையை நீதிபதி ரோகிணி தலைமையிலான ஆணையம் குடியரசுத் தலைவரிடம் அளித்தது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment