ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் 18 மாநிலங்களில் ரூ.6366 கோடி நிலுவை! ஒன்றிய பா.ஜ.க. அரசுமீது காங்கிரசு குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் 18 மாநிலங்களில் ரூ.6366 கோடி நிலுவை! ஒன்றிய பா.ஜ.க. அரசுமீது காங்கிரசு குற்றச்சாட்டு

புது­டில்லி, ஆக.25 - கோடிக்­க­ணக்­கான மக்­கள் பயன்­பெ­றும் ஊரக வேலை­வாய்ப்­புத் திட்­டத்­தில், ஆறா­யி­ரத்து 366 கோடி ரூபாயை ஒன்­றிய பா.ஜ.க. அரசு வழங்­கா­மல், பாக்கி வைத்­துள்­ள­தாக காங்கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.

மல்­லி­கார்­ஜுன கார்கே வெளி­யிட்ட சமூக வலை­தள பதி­வில், கடந்த 2005 ஆம் ஆண்டு இதே நாளில், கோடிக்­க­ணக்­கான மக்­க­ளின் வேலை உரி­மைத் திட்­ட­மாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை­வாய்ப்பு உத்­த­ர­வா­தத் திட்­டத்தை காங்­கி­ரஸ் அரசு கொண்­டு­வந்­ததை நினை­வு­கூர்ந்துள்ளார்.

மோடி ஆட்­சி­யில் இத்­திட்­டத்­திற்­கான நிதி 33 சத­வி­கி­தம் குறைக்­கப்­பட்­ட­து­ டன், 18 மாநிலங்களுக்கு வழங்க வேண்­டிய ஆறா­யி­ரத்து 366 கோடி நிதியை வழங்­கா­மல் பாக்கி வைத்துள்ள­தை­யும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார். ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் மக்­கள் விரோத போக்கு தொடர்ந்­தா­லும், இத்­திட்­டத்­தில் தற்­போது பணி­யாற்­றும் 14 கோடியே 42 லட்­சம் மக்­க­ளுக்கு ஆதரவாக காங்­கி­ரஸ் துணை நிற்­கும் என்று மல்­லி­கார்­ஜுன கார்கே கூறி­யுள்­ளார்.

ஊரக வேலை­வாய்ப்பு திட்­டத்­தில் பய­ன­டை­ப­வர்­க­ளில், பாதிக்­கும் மேற்­பட்­டோர் பெண்­கள் என்­ப­தை­யும் அவர் சுட்­டிக்­ காட்­டி­யுள்­ளார். மேலும், கரோனா பெருந்­தொற்று ஊர­டங்கு காலத்தில், கோடிக்­க­ணக்­கான மக்­களை, ஊரக வேலை­வாய்ப்பு திட்­டம் பாது­காத்­த­தாக மல்­லி­கார்­ஜுன கார்கே தெரி­வித்­துள்­ளார்.


No comments:

Post a Comment