வெட்டிக்காடு பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 17ஆவது விளையாட்டு விழா - பரிசுகள் அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

வெட்டிக்காடு பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 17ஆவது விளையாட்டு விழா - பரிசுகள் அளிப்பு


வெட்டிக்காடு, ஆக. 19-
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியின் 17ஆவது விளையாட்டு விழா 15.8.2023 அன்று மாலை 2.30 மணியளவில் சிறப்பு விருந்தினர் தஞ்சாவூர் மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் ப.கற்பகம் தலைமையில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ப.கற்பகம் சிறப்பு விருந்தினராக பள்ளியின் 17ஆவது விளையாட்டு விழா விற்கு வருகை புரிந்தார். சிறப்பு விருந்தினரை பள்ளி இளஞ் செஞ்சிலுவை சங்கத்தின் மாணவர்கள் அணிவகுத்து வரவேற்றனர்.

பள்ளி மாணவர்களால் “ஒலிம்பிக் தீபம்” ஏற்றப்பட்டது சிறப்பு விருந்தினர் பலூன்களை பறக்க விட சிறப்புடன் விழா துவங்கியது.

நான்கு அணிக்குழு மாணவர்களின் பெருங்கூட்டப் பயிற்சி அணிவகுப்புகள்  நடைபெற்றன. பள்ளியின் முதல்வர் சு.சாந்தி அனைவரையும்  வரவேற்று வர வேற்புரை நல்கினார்.

விளையாட்டுப் போட்டிகள் பற்றிய செயல்பாடுகள் குறித்து உடற்கல்வி ஆசிரி யர் மா.நித்யா ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவினை சிறப்பிக்கும் பொருட்டு வருகை புரிந்த,பெரியார் மணியம்மை அறிவியல் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்கு நர் ரமேஷ், வெட்டிக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி மைனர், பள்ளி மேனாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருஞானம், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ம.மதிமேகலா உள்ளிட் டவர்களுக்கு பயனாடைகள் அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் தலைமையில் மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடன டியாக இறுதிப்போட்டி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நடைபெற்ற  போட்டிகள்

 எலுமிச்சை கரண்டி வாயில் கவ்வுதல், தவளை ஓட்டம், ஓட்டப்பந்தயம், மணி கோர்த்தல், தண்ணீர் பாட்டில்  சேமித்தல், கிளிப் சேகரித்தல், சாக்குப் போட்டி, பலூன் ஊதி உடைத்தல். பள்ளிக்கு தயார் ஆதல்.  பந்து சேகரித்தல்,  நடைப் போட்டி. 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

அனைத்தையும் கண்டு களித்து மகிழ்ந்த சிறப்பு விருந்தினர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ப.கற்பகம் முதல் வர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மாண வர்களைப் பாராட்டி மகிழ்ந்தார். ஆசிரி யர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

மாணவர்கள் செய்த அனைத்து செயற் பாடுகள், போட்டிகள், நிகழ்ச்சியின் பங்கு பெற்று சிறப்பித்த பெற்றோர்கள்  அனை வரையும் பாராட்டி அருமையாகவும் வியக்கும் வண்ணம் இருந்ததோடு மட்டுமல்லாமல், உள்ளம் பெருமகிழ்வு அடைந்தது. இந்த விளையாட்டு விழா என்னால் மறக்க முடியாத ஒன்று என்றும் மனமகிழ்ந்து சிறப்புரை வழங்கினார்.

உடற்கல்வி இயக்குநர் பெ.ம.ப.க. ரமேஷ்  உடற்பயிற்சிகளின் பயன்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இவ்வாண்டிற்கான “தகைசால் தமிழர்  விருது” பெற்ற சிறப்பினை பள்ளி யின் சார்பாக அனைவருக்கும் அறிவித்து  மகிழ்ந்தோம்.

நம் பள்ளி மாணவர்களால் தேசியக் கொடி, கொட்டாங்குச்சி ,வண்ணக்குச்சி, கோலாட்டம், கைதட்டல் இடம்பெறும் உடற்பயிற்சியுடன் கூடிய நடனமுறை கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தி சிறப்பிக்கப் பட்டன. 

பெற்றோர்கள் ,பள்ளியில் பணி புரியும் பணியாளர்கள் அனைவருக்கும் விளை யாட்டு வைத்து அதற்குரிய முதல் மூன்று பரிசுகள் பிரித்து வழங்கப்பட்டன.

இறுதியாக விளையாட்டுப் போட்டி களில் பங்கு பெற்று வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட் டன. பள்ளியின் துணை முதல்வர் மா.அன் புச்செல்வி நன்றியுரை வழங்கினார். 

நாட்டுப்பண் முழக்கத் தோடுஇனிதே விழா முடிவுப் பெற்றது.

No comments:

Post a Comment