மணிப்பூர் கலவரம் : 14,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இடம் பெயர்வு மாநிலங்களவையில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

மணிப்பூர் கலவரம் : 14,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இடம் பெயர்வு மாநிலங்களவையில் தகவல்

புதுடில்லி, ஆக.3  மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 14,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாண வர்கள் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக நேற்று (ஆகஸ்ட் 2) ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்த தகவலை மாநிலங் களவையில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் அன் னப்பூர்ணா தேவி எழுத்து பூர்வமாக தெரிவித்தார். இதில் சுமார் 93 சதவீதம் மாணவர்கள் அருகாமை யில் உள்ள பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள் ளார். “மணிப்பூரில் நில வும் சூழல் காரணமாக சுமார் 14,763 பள்ளி செல்லும் மாணவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இடம் பெயர்ந்த மாணவர்கள் பள்ளியில் சேர்க்கை பெறும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் அனைத்து நிவாரண முகா முக்கும் நோடல் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளார்.

இடம்பெயர்ந்த மாணவர்களில் 93.5 சதவீதம் பேர் அவர்கள் தங்கியுள்ள இடத்துக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் இலவசமாக சேர்க்கை பெற்றுள்ளனர்” என அமைச்சர் அன்னப் பூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment