ஒகேனக்கல் - காவிரியில் நீர்வரத்து 13,500 கனஅடியாக அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 18, 2023

ஒகேனக்கல் - காவிரியில் நீர்வரத்து 13,500 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி,ஆக.18- கருநாடக மாநில அணை களில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

குறிப்பாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

ஒகேனக்கல்லில் கடந்த 16-ஆம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை அள வீட்டின்போது விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.


No comments:

Post a Comment