கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.8.2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.8.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

*மணிப்பூர் கலவரத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளான மேலும் ஒரு பெண், பிரதமருக்கு கடிதம்.

* ஒன்றிய அரசில் நிரப்பப்படாமல் உள்ள 19 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ஓபிசி கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தில் வி.அனுமந்தராவ் கோரிக்கை.

* தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதியை விலக்கி, அமைச்சரை சேர்க்கும் மசோதாவை மோடி அரசு  மாநிலங்களவையில் அறிமுகம்.

* ஜாதிவாரி கணக்கெடுப்பினை உ.பி.யில் எடுக்கும் உத்தேசம் இல்லை, யோகி அறிவிப்பு.

* மும்பையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பங்கேற்க முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* அயோத்தி மேம்பாட்டு திட்டத்தில் ஒப்பந்ததாரர் களுக்கு ரூ. 19.73  கோடி அளவிற்கு தேவையற்ற சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை.

* டில்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பாடத்திட்டத்தில் 'பிராமணமயமாக்கல்' என்ற சொல் கைவிடப்பட்டது, சமத்துவமின்மை பற்றிய தாள் திரும்பப் பெறப்பட்டது

தி டெலிகிராப்:

*அனைவரையும் ‘வாயை மூடு; என்று சொல்லும் மோடி அரசின் தடையை உடைக்க இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா விளாசல்.

* நம்மை அழிக்க நினைக்கும், மதவெறி கும்பலுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவோம் என பழங்குடியினருக்கு ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அழைப்பு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment