இன்று (06.08.2023) மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடு துறை தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க கட்டடத்தில் 110 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது.
திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையேற்று உரையாற்றினார். தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி தொடங்கி வைத்து உரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.
கழக சொற்பொறுப்பாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி - "தந்தை பெரியார் ஒரு அறிமுகம்" என்ற தலைப்பில் முதல் வகுப்பு நடத்தினார்.
No comments:
Post a Comment