பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மடியும் குழந்தைகள் குழந்தைகள் நலனுக்கு ஒதுக்கிய ரூ.1000 கோடி என்ன ஆனது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மடியும் குழந்தைகள் குழந்தைகள் நலனுக்கு ஒதுக்கிய ரூ.1000 கோடி என்ன ஆனது?

அகமதாபாத், ஆக.3 - பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் மரணம் அடைந் துள்ளன. குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் லூட்பாய் கிராமத்தில் மட்டும் மே மாதம் இரண்டு குழந்தைகளும் ஜூலை மாதம் 3 குழந்தைகளும்  என 0-15 மாத வயது மட்டுமே உடைய 5 குழந்தைகள் இறந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து அங்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு 322 குழந்தைக ளுக்கு நடத்திய பரிசோதனையில் அக் கிராமத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஊட் டச்சத்து குறைபாடு இருப் பது கண்டறியப்பட் டுள்ளது.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த தரவுகளின் படி குஜராத் மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மொத்தம் 1 லட் சத்து 25 ஆயிரத்து 707 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக் கப்பட்டுள்ளன.  

பாஜக ரூ.3 ஆயிரம் கோடி செலவு செய்து வல்லபாய் பட் டேலுக்கு சிலை வைத்த நர்மதா மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரத்து 429 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 1,01,586 குழந்தை கள் எடை குறைபாட்டாலும் 24 ஆயி ரத்து 121 குழந்தைகள் தீவிரமான எடை குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிய வருகிறது. 

உண்மை நிலை இவ்வாறிருக்க குழந்தைகள் நல திட்டத்திற்கு குஜராத் பாஜக அரசு ஆண்டு தோறும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து சிரஞ்சீவி யோஜனா, பால் போக் யோஜனா, வைட்ட மின் யுக்த் போஷன் ஆஹார் யோஜனா, கன்யா கவுவானி யோஜனா, பால் சகா மய்யம் போன்ற  திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

உண்மை நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இப்பணத்தில்  பாஜக அரசு  ஊழல் செய்திருக்கும் என்ற வலுவான சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இறந்த குழந்தை கள் அனைவரும் எடை குறைபாடு, காய்ச்சல் உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாட்டு கார ணங்களாலேயே உயிர் இழந்துள்ளனர்.

ஆனால் அரசு அதிகாரிகள் பாஜக அரசை காப்பாற்றும் நோக் கத்தோடு இது ஊட்டச் சத்துக் குறைபாடு மரணம் அல்ல, உடல் எடை குறைபாட்டால் உண்டான மரணம் என்று விசித்திரமாக விளக் கமளித்துள்ளனர். 

தரவுகள் இருப்பதால் தானே பா.ஜ.க. ஆட்சியின் அவல நிலை பொது  மக்களுக்கு தெரிய வருகிறது. அதனால் இந்த ஆண்டு நடக்க இருக்கும் தேசிய குடும்ப நல ஆய்வில் ரத்தச் சோகை குறித்தான தரவுகளை பெறுவதை பா.ஜ.க. அரசு நீக்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment