இன்று (24.7.2023) மது ரையில் உள்ள நமது தலைமைக் கழக அமைப் பாளர் மானமிகு தோழர் செல்வம் அவர்கள் அனுப் பிய மின்னஞ்சல் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி யடைந்தேன்.
மறைந்த நமது கெழுதகை கொள்கைத் தோழர் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் மனோகரன் (தூத்துக்குடி) அவர்களது துணைவியார் ஓய்வு பெற்ற பேராசிரியர் - முதல்வர் திருமதி கஸ்தூரிபாய் அவர்கள் (வயது 78) நேற்று (23.7.2023) இரவு 8 மணியளவில் மதுரையில் இயற்கை எய்தினார் என்ற செய்திதான் அது!
பேராசிரியர் கஸ்தூரிபாய் அவர்கள் பண்பாளர், தலைசிறந்த கல்வியாளர் ஆவார்.
தோழர் மனோகரன் காலமாகி சில ஆண்டுகள் ஆயினும்கூட, அவர் ஒவ்வொரு ஆண்டும் - அவர் விருப்பப்படியும் - தன் விருப்பப்படியும்
ரூ.50 ஆயிரம் நன்கொடையாக நமது பெரியார் அறக்கட்டளைக்கு அனுப்பத் தவறவே மாட்டார்; அத்தகைய கடமை உணர்ச்சியாளர் அவர்.
அவரை இழந்துவாடும் அக்குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் உரித்தாக்கு கிறோம்.
அவரது இழப்பு இயக்கத்திற்கு ஒரு முக்கிய இழப்பு!
அவருக்கு நமது வீரவணக்கம்!
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
முகாம்: மலேசியா - கோலாலம்பூர்
24.7.2023 திராவிடர் கழகம்
No comments:
Post a Comment