அதிகார பேராசையால் பெண்களின் மதிப்பு மற்றும் நாட்டின் சுயமரியாதையுடன் பா.ஜ.க. விளையாடுகிறது! குற்றச்சாட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 30, 2023

அதிகார பேராசையால் பெண்களின் மதிப்பு மற்றும் நாட்டின் சுயமரியாதையுடன் பா.ஜ.க. விளையாடுகிறது! குற்றச்சாட்டு!

புதுடில்லி, ஜூலை 30 - மணிப்பூரில் கடந்த மே 4ஆம் தேதி இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர் வாணமாக அழைத்து சென்றது, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் சரண்சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்தது தொடர்பான செய்திகள் தொடர்பான காட்சிப் பதிவுகளை இணைத்து ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்காத எந்த நாடும் முன்னேற்றம் அடையாது. அதி கார பேராசையால், பெண்களின் மதிப்பு மற்றும் நாட்டின் சுயமரி யாதை ஆகியவற்றுடன் பா.ஜ.க. விளையாடுகிறது என குறிப்பிட்டு உள்ளார். ஏழை, பணக்காரன் இடைவெளி அதிகரித்துவிட்ட து ஜூலை 20 அன்று காய்கறி விற்ப னையாளர் ஒருவர், காய்கறிகளின் விலையேற்றத்தால் தனது துயரங் களைச் சொல்லும் காட்சிப்பதிவை ராகுல் வெளியிட்டு,’ நாடு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒருபுறம், ஆளும் ஆட்சியால் பாது காக்கப்படும் சக்தி வாய்ந்தவர்கள் உள்ளனர். மறுபுறம் பொதுவான இந்தியர்கள் உள்ளனர். அவர் களுக்கு காய்கறிகள் போன்ற அடிப்படை விஷயங்கள் கூட கிடைக்காமல் போகிறது. பணக் காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே விரிவடைந்து வரும் இந்த இடைவெளியை நாம் குறைக்க வேண்டும். இந்த கண்ணீரை துடைக்க வேண்டும்’ என்று டிவிட் டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் .


No comments:

Post a Comment