வைக்கம் போராட்ட நூற்றாண்டு - கலைஞர் நூற்றாண்டு - ஆசிரியர் கி.வீரமணி 90இல் 80 விழா பொதுக்கூட்டம்
பட்டுக்கோட்டை,ஜூலை20- பட்டுக்கோட்டை கழக மாவட்டம் ஆலடிக்குமுளை கிராமத்தில் 15.7.2023 சனி அன்று மாலை 6 மணி அளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு - கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி 90 இல்80 ஆகிய முப்பெரும் சிறப்பு கழக பிரச்சார கூட்டம் நடை பெற்றது.
கழக பட்டுக்கோட்டை ஒன் றிய இளைஞரணி பொறுப்பாளர் ஆர்.கே.ஆசை பாண்டியன் தலை மையில், கழக மாவட்ட வழக் குரைஞர் அணி அமைப்பாளர் வழக்குரைஞர்அ. அண்ணாதுரை வரவேற்றார்.
பட்டுக்கோட்டை ஒன்றிய திரா விட முன்னேற்றக் கழக அவைத் தலை வர் இளங்கோ, மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் ஆ.இரத்தின சபாபதி, ஒன்றிய கழக தலைவர் இரெ.வீரமணி முன்னிலை வகித் தனர்.
கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார். அவர் 90 நிமிட உரை யில், இயக்க அடிப்படை வரலாறு, கல்வி வள்ளல் காமராஜரும் திரா விடர் இயக்கமும் 60 ஆண்டு களுக்கும் மேலாக ஆட்சி செய்து வருவதன் விளைவாக தமிழ்நாடு பெற்று இருக்கும் மிகப்பெரிய வளர்ச்சி, வைக்கம் போராட் டத்தின் விளைவாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வடநாட் டில் மகாராஷ்டிராவில் மகர் பகுதியில் போராட்டம் நடத்திய தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டு குறித்தும் விளக்கி உரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்டத் தலை வர் அத்திவெட்டி பெ. வீரையன், பொதுக்குழு உறுப்பினர் பேரா வூரணி இரா. நீலகண்டன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்து துரைராஜ், பட்டுக் கோட்டை நகர தலைவர் பொறி யாளர் சிற்பி வை.சேகர், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர் திருமேனி, வீரக்குறிச்சி ஆனந்தன் மற்றும் வீரக்குறிச்சி கழகத் தோழர்கள் இளைஞர் அணி தோழர்கள் மக ளிர் அணியினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பட்டுக்கோட்டை கழக ஒன் றிய செயலாளர் ஏனாதி சி. ரெங்க சாமி நன்றி கூறினார்.
கூட்டம் நடைபெறும் இடம் மேடை அமைக்கப்பட்டு மிக நேர்த்தி யாக கழகக் கொடிகள் கட்டப்பட்டு மிகுந்த எழுச்சியுடன் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கான ஏற் பாடுகளை கழகப் பொறுப்பா ளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment