புதுடில்லி, ஜூலை 8 - அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டுமனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தை நாட ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல்காந்தி அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி, சூரத் நீதிமன்றம், 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனால், அவர் மக்களவை உறுப்பினர் பத வியை இழந்தார். அதன்பின்னர், சூரத் செசன்ஸ் நீதிமன் றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும், தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க நீதி மன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறை யீடு செய்தார்.
கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்றம், கோடை கால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்ப டும் என தெரிவித்தது. அதன்படி, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் நேற்று (7.7.2023) தீர்ப்பு வழங்கினார். அவர் வெளியிட்ட தீர்ப்பில், ராகுல் காந்திக்கு விதிக்கப் பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டார். இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்ய ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment