இராஜகிரியில் வைக்கம் நூற்றாண்டு - திராவிட மாடல் ஆட்சி விளக்கம் - டாக்டர் கலைஞர் நூற்றாண்டு - தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

இராஜகிரியில் வைக்கம் நூற்றாண்டு - திராவிட மாடல் ஆட்சி விளக்கம் - டாக்டர் கலைஞர் நூற்றாண்டு - தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

பாபநாசம், ஜூலை 20-பாபநாசம் ஒன் றியம் இராஜகிரியில் நேற்று (19.07.2023) ஒன்றிய திராவிடர் கழகம் சார்பாக வைக்கம் நூற்றாண்டு விழா - திராவிட மாடல் ஆட்சி விளக்கம் -  டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா -_ தெருமுனைப் பிரச் சாரக் கூட்டம் நடைபெற்றது.

பாபநாசம் ஒன்றிய கழக தலைவர் தங்க பூவானந்தம் தலைமை ஏற்றார். ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை துரைராசு, ஒன்றிய துணைத் தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மாநில பகுத்தறி வாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் ஆகியோர் துவக்க உரை யாற்றினர். 

கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற் றினார். அவருக்கு இராஜகிரி பஞ்சா யத்து மன்ற தலைவர் பகிர்ஷா, மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பயனாடை அணிவித்து மரியாதை செலுத் தினர்.

குடந்தை கழக மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் க.திருஞான சம்பந்தம் பிறந்தநாளை முன்னிட்டு பயனாடை அணிவித்து மேடையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அய்யம்பேட்டை நகர செயலாளர் அறிவழகன், திராவிட தொழிலாளர் அணியின் மாவட்ட செயலாளர் கோவி.கண்ணன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் சரவணன், உம்பளா பாடி கழக செயலாளர் வரதராஜன், பாபநாசம் நகர தலைவர்  இளங்கோவன், நகர செயலாளர் மு. வீரமணி, இராஜகிரி கழக பொறுப்பாளர் விமல், இராஜகிரி கழக செயலாளர் சூ.கலியமூர்த்தி, பாப நாசம் ஒன்றிய கழக அமைப்பாளர் கை.ராஜராஜன், நாணல் காடு தோழர் மணியன், புண்ணியமூர்த்தி, உமையாள் புரம் சுந்தர மணிகண்டன் மற்றும் ஏராளமான கழகப் பொறுப்பாளர் களும் பொதுமக்களும் கலந்து கொண் டார்கள்.

No comments:

Post a Comment