ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 22, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

22.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ம.பி.தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்நாத்தை களமிறக்க காங்கிரஸ் முடிவு.

* எதிர்க்கட்சிகள் ஊழல்வாதிகள் என கூறும் மோடி, தனது பக்கத்தில் அஜித் பவார், அரியானாவில் பிரிஜ் பூஷன் ஆகியோரை வைத்துக் கொண்டு எப்படி பேச இயலும் என்கிறார் பத்திரிகையாளர் ஷிகா முகர்ஜி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமானால், கோவில் விழாக்களை தடை செய்ய நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

* மணிப்பூர் வன்முறைக்குப் பொறுப்பேற்று தான் பதவி விலக முடியாது என்கிறார் முதலமைச்சர் பைரன் சிங்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அரியானாவில் உள்ள குருக்ஷேத்ராவில் உள்ள நீதிபதி ஒருவர், "இரண்டு ஒன்றிய அமைச்சர்களின் ஊழியர்கள்" என்று கூறிக் கொள்பவர்கள், காசோலை பவுன்ஸ் வழக்கை நீண்ட நாட்களுக்கு:ஒத்திவைக்கக் கோரி மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் நீதிமன்றத்தில் செல்வாக்கு செலுத்த முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

* உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீது குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பெண்களுக்கு எதிரான வன்முறையில் பாஜக செயலற்றதாக இருப்பதாக விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, 2024இல் பெண் வாக்காளர்கள் காவி கட்சியை அரசியலில் இருந்து தூக்கி எறிவார்கள் என்று கூறினார்.

தி இந்து:

* 2018 ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்டுள்ள 604 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 454 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தெரிவித்தார்.

 தி டெலிகிராப்:

* உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் ‘ஜெய் சிறீ ராம்’ என்று முழங்க இமாம் ஒருவர் வற்புறுத்தப்பட்ட தாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

- குடந்தை கருணா


No comments:

Post a Comment