அகற்றப்படாது அம்பேத்கர் படம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 25, 2023

அகற்றப்படாது அம்பேத்கர் படம்

தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்கு நாட்களாக வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மனக்குமுறலையும், பதற்றமான சூழ்நிலையையும் ஏற்படுத்திய, கீழமை நீதிமன்றங்களில் அரசமைப்புச் சட்ட தந்தை பாரத ரத்னா பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் சிலை மற்றும் படத்தை அகற்ற உயர்நீதிமன்றத்தின் 7-7-2023 தேதியிலான சுற்றறிக்கையை அறிந்து, மேற்படி அறிக்கையை  திரும்பப் பெறவும், மறுபரிசீலனை செய்திடவும் வலியுறுத்தி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று (24.7.2023) மாலை 6.30 மணிக்கு தலைவர் மாரப்பன் தலைமையில், பொருளாளர்முரளிபாபு, மண்டலச் செயலாளர் பாலமுருகன், துணைத் தலைவர்விஜயகுமார் ஆகியோர் அகில இந்திய பார்கவுன்சில் துணைத் தலைவர் மூத்த வழக்குரைஞர் பிரபாகரன் முன்னிலையில் மனு அளித்து, எடுத்துரைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கனிவோடு படித்து, கேட்டறிந்து உடனடியாக மறுபரிசீலனை செய்ய  நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது நீதிமன்றத்தில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் படம் இனி அகற்றப்படாது எனவும், புதியதாக படம் வைப்பதற்கு பின்னர் பரிசீலிக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும் E-Filing முறையால் ஏற்படும் சிரமங்களையும் பற்றி கூறியதற்கு, மேற்படி சிரமங்களை களைய கால அவகாசத்தை நீட்டிப்பதாகவும், நடவடிக்கைக்கு ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.


No comments:

Post a Comment