ஆழ்துளை
தமிழ்நாடு முழுவதும் செயல்படாத ஆழ்துளை கிணறுகள், குவாரி குழிகளை உடனே கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு.
அஞ்சல் சேவை
சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தில் உள்ள தியாகராயர் நகர், மயிலாப்பூர், சூளைமேடு, கிரீம்ஸ் சாலை, கோபாலபுரம், தேனாம்பேட்டை, தியாகராயர் நகர் வடக்கு, திருவல்லிக்கேணி ஆகிய 8 அலுவலகங்களில் பார்சல் பேக்கே ஜிங் யூனிட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை மத்திய அஞ்சல் கோட்ட கணகாணிப்பாளர் திவ்யா சந்திரன் தகவல்.
விடுவிப்பு
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை தமிழ்நாடு மீன் வளத்துறை அதிகாரிகள் வரவேற்று வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment