ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் எதிர்க்கட்சிகள் முடிவு
புதுடில்லி, ஜூலை 26-- மணிப்பூர் கொடூரம் தொடர்பாக ஒன்றிய அரசு மீது மக்களவையில் நம் பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி திட்டமிட் டிருப்பதாக தகவல் வெளியாகியுள் ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆ-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மணிப்பூர் விவ காரம், ஒன்றிய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன் படுத்துவது உள்ளிட்ட பிரச்சினை களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனி டையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக சமீபத்தில் மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண் களை நூற்றுக்கணக்கான ஆண் கள் நிர்வாணப்படுத்தி ஊர்வல மாக அழைத்துச்செல்லும் காட்சிப் பதிவு ஒன்று வெளியாக நாடு மு ழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது.
நாடாளுன்ற முடக்கம்: இதனைத் தொடர்ந்து.‘மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின் றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத் தொட ரில் இதுவரை எந்த ஒரு முக்கிய மான அலுவலும் நடத்த இயலா மல் நாடாளுமன்றம் முடங்கியுள் ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம்:
இந்த நிலையில், நாடாளுமன் றத்தை தொடர்ந்து நடத்துவது தொடர் பாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடை பெற்றது. அதில் தங்களது கோரிக் கையில் இருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கப் போவது இல்லை என்பதால், அமளிகளுக்கு இடை யில் அலுவல் களை நடத்த அரசு முடிவெடுத்திருந்தது.
இதனிடையே இந்தியா கூட்டணி மக்கள வையில் ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக கடந்த 2003ஆ-ம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப் பட்டது.
இதனிடையே, மக்களவை நேற்று (25.7.2023) 4ஆவது நாளாக கூடியதும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பின. மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லா அமளி யில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதிகாத்து இருக்கையில் அமருமாறும் கூறினார். அவையில் தொடர்ந்து கூச்சலிடுவதால் எந் தத் தீர்வும் கிடைக்காது என்றும், முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை அனு மதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பவே, மக்களவைத் தலைவர் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து மக்களவைத் தலை வர் உத்தரவிட்டார்.
அதேபோல் மாநிலங்களவையி லும் அமளி நீடித்ததால் அவையை 12 மணி வரை அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment