பெரியாரியல் பயிற்சிப் பட்டறைப் பொறுப்பாளரும் மாநில ஒருங்கிணைப்பாளருமான தஞ்சை இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சிப் பட்டறையில் திராவிடர் கழகத்தின் காப்பாளர் பெ.இராவணன், பகுத்தறி வாளர் கழக மாநில துணைத்தலைவர் அ.சரவணன், காப்பா ளர் ஆ.சுப்பையா, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாவட்ட துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, பொதுக் குழு உறுப்பினர்கள் சு.தேன்மொழி, மூ.சேகர், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சு.சித்திரவேல், கந்தர்வ கோட்டை ஒன்றியத் தலைவர் ஜெ.சங்கர், ஒன்றியச் செயலா ளர் த.செல்வகுமார், மாவட்ட இளைஞரணித்தலைவர் கா.காரல்மார்க்ஸ், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தி.பொன்மதி, ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் மூ.சே.உதயச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரா விட மாணவர் கழகத்தின் மாநிலச்செயலாளர் இரா.செந்தூர பாண்டியன் தொடக்க உரையாற்றினார்.
முதல் நிகழ்வாக டாக்டர் இரா.கவுதமன் பேயாடுதல் சாமி ஆடுதல் ஆகியவை குறித்து அறிவியல் விளக்கமாகவும் எடுத்து சொல்லி விளக்கி அதுபோல் சாமி ஆடுபவர்களுக்கு எந்த மாதிரியான மருத்துவம் செய்ய வேண்டி உள்ளது என்பது குறித்தும் பேசினார். இரண்டாவது நிகழ்வாக கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி அன்பழகன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் குறித்தும் அதனால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்திய அளவில் ஏற்பட்டுள்ள சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்தும் தந்தை பெரியாரின் கொள்கைகளை உலக அளவில் கொண்டு போய் சேர்த்து பறைசாற்றி வரும் விதங்கள் குறித் தும் விடுதலையில் தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றி அதன் மூலம் ஏற்படுத்திய புரட்சிகள் குறித்தும், விளக்கிப் பேசினார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு மூன்றாவது நிகழ்வாக முனைவர் ந.எழில் தந்தைபெரியார் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் பெரியார் சிறுவயதாக இருந்தபோது பெரியார் அவர்களின் குடும்பத்தார் செலவில் ஏற்பாடு செய்த பார்ப் பனர்களுக்கான போஜன விழாவில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடங்கி வைக்கம் போராட்டம், கள்ளுக்கடை மறியல் போராட்டம் உள்ளிட்ட அவர் எடுத்த அனைத்து போராட் டங்கள் பற்றியும் விளக்கினார். குறிப்பாக கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்ட பிறகு தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும் சகோ தரியார் கண்ணம்மாவும் நடத்திய போராட்டம் இந்திய அளவில் வெள்ளைக்காரர்களை திக்கு முக்காடச் செய்ய வைத்தது, இரு பெண்களும் எடுத்த போராட்ட வடிவமானது ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்தது. அவர்களே போய் காந்தியாரிடம் முறையிடும் அளவிற்குச் சென்றது. இது எனக்குத் தெரியாது தந்தை பெரியாரின் போராட்ட வழி அது தான். அவரிடம் தான் நீங்கள் போய் பேச வேண்டும் என்று காந்தியாரே சொல்லும் அளவிற்கு அந்தப் போராட்டத் தில் உக்கிரம் இருந்தது. இது போல் தந்தை பெரியாரின் போராட்ட வடிவங்கள் எல்லாவற்றையும் எடுத்து விளக்கிப் பேசினார்.
நண்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகு ஊடகத் துறையில் தடம் பதித்த திராவிடர் இயக்கம் செய்த சாத னைகள் குறித்து வி.சி.வில்வம் மற்றும் மா.அழகிரிசாமி இருவரும் எளிமையாக விளக்கிப் பேசினார்கள். அப்போது சமூக மாற்றம் மற்றும் அரசியல் மாற்றங்களுக்காக தந்தை பெரியார் காலந்தொட்டு வெளியிட்டு வரும் குடிஅரசு, விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேஷன்லிஸ்ட் போன்ற இதழ்களுடன் தொலைக்காட்சியாக பெரியார் தொலைக்காட்சி, சமூக காட்சி ஊடகங்களாக அறிவுச் சுடர், புரட்சிப் பெண், பெரியார் பேரன், சிஷீஜீஹ் ஷீஜீ ஆகிய ஊடகங்கள் சமூகத்தில் பெரியாரைப் பற்றி எப்படி யெல்லாம் பேசி வருகின்றன எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பது குறித்தும் விளக்கிப் பேசினார்கள்.
நிகழ்வின் அடுத்த அமர்வாக தந்தை பெரியாரின் பெண் ணுரிமைச் சிந்தனைகள் குறித்து பேராசிரியர் முனைவர் மு.சு.கண்மணி பயிற்சிக்கு வந்திருந்த மாணவர் களின் கல்வி, வயது, புரிந்து கொள்ளும் தன்மைக்கு ஏற்ப, மனநிலைக்கு ஏற்றவாறு பேசினார்.
இந்நிகழ்வில் வழக்குரைஞர் பூவை.புலிகேசி தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும் என்ற தலைப்பில் பேசுகையில் உலகில் எந்த நாட்டிலும் ஜாதியே கிடையாது இந்தியாவைத் தவிர. உலகில் ஜாதி ஒழிய வேண்டும் என்று எத்தனையோ பேர் பேசியிருக்கிறார்கள். ஆனால் அதற்காகச் செயல்பட்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்தான். 1917-ஆம் ஆண்டு ஈரோடு நகர் மன்றத் தலைவராக இருந்தபோது அங்கிருந்த வார்டு தெருவிற்குப் பெயர் கொங்கு பறத்தெரு என்று இருந்தது. அதை மாற்ற நினைத்த தந்தை பெரியார் அவர்கள் தீர்மானம் இயற்றி அந்தத் தெருவை திருவள்ளுவர் தெரு என்று மாற்றினார் என்றார்.
இந்நிகழ்வில் மேலும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே.இராஜவேல், இருவரும் ஓர் இளங்கோவன் ஆகி வரும் கலந்து கொண்டனர். பயிற்சி நிறைவாக மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. சிறப்பாக குறிப்புரைகள் பதிவு செய்த முதல் மூன்று பேருக்கு நினைவுப் பரிசாக புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டு பயனடைகள் அணிவிக்கப்பட்டன. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஆறு.பாலச்சந்தர் -புனிதா வாளழவணையர் சால்வை அணிவித்து பாராட்டப்பட்டனர். அனைத்து நிகழ் வுகளையும் பெரியார் பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் சிறப்பாக ஒருங்கிணைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டிப் பேசினார். இந்நிகழ்வில் ஆண்கள் 51 பேரும் பெண்கள் 8 பேரும் என கலந்து கொண்டனர். அவர்களில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர் 19பேரும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் 40பேரும் என்பது குறிப்பிடத் தக்கது.
பயிற்சியில் குறிப்பெடுத்துக் கொண்டவர்களில் முதல் பரிசை புதுக்கோட்டை தெ.அறிவொளி பிரபாகரன் என்ற மாணவரும் இரண்டாம் பரிசை குழிபிறையைச் சேர்ந்த தி.பொன்மதி என்ற மாணவரும் மூன்றாம் பரிசை ஆதனக் கோட்டையைச் சேர்ந்த தெ.கவிராகுல் என்ற மாணவரும் பெற்றனர்.
இந்த பயிற்சிப் பட்டறை குறித்து கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வாழ்த்தியும் பாராட்டியும் பேசினார்.
No comments:
Post a Comment