ஒசூர், ஜூலை 18- ஒசூர் மாநகர திராவிடர் கழக கூட்டம் மாநகர செயலாளர் பெ.சின்னராசு தலைமையில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பொதுகுழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கூட்டத்தின் நோக்கம் குறித்து மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் உரையாற்றி னார்.
ஒசூர் மாநகர 45 வார்டுகளை மூன்று கிளைகளாக பிரிக்கபட்டு (ஒவ்வெரு கிளைகளுக்கும் 15 வார்டுகளை கொண்டது)அந்த கிளைகளுக்கு கீழ்க்கண்டவர்களை பொறுப்பாளராக அறிவித்தார்.பெரியார் சதுக்கம் கிளை தலைவர் து.சங்கிதா, செயலாளர் அ.கிருபா, மூவேந்தர் நகர் கிளை தலைவர் இரா.செயசந்திரன், செயலாளர் பெ.கண்ணன், சாந்திநகர் கிளை தலைவர் ப.முனுசாமி, செயலாளர் மூ.கார்திக்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் இரா.செயசந் திரன், திராவிடர் தொழிலாளரணி மாவட்ட செயலாளர் பா.வெற்றி செல்வன், பகுத்தறிவாளர் கழக மாநகர தலைவர் வசந்தந்திரன், செயலாளர் பேராஜன், கலைத் துறை மாவட்ட அமைப்பாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுயமரியாதைச் சுடரொளி பெரியார்சுப்பிரமணியின் மகன் குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குவது எனவும்,
வைக்கம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகரட்சி கிளை கழகங்களில் 10 இடங்களில் விரைவில் கொடிகள் கழக கொடி ஏற்றுவது எனவும் தீர்மானிக்கபட்டது.
No comments:
Post a Comment