தமிழ்நாடு புலவர் குழுத் தலைவராக விஅய்டி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

தமிழ்நாடு புலவர் குழுத் தலைவராக விஅய்டி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தேர்வு

சென்னை, ஜூலை 31- முத்தமிழ்க் காவலர் என போற்றப்பட்ட கி.ஆ.பெ.விசுவநாதம் 65 ஆண்டுக ளுக்கு முன்னர் தொடங்கிய தமி ழகப் புலவர் குழுவின் 115-ஆவது கூட்டம் சென்னையில் 29.7.2023 அன்று நடைபெற்றது. அமைப்பின் காப்பாளர் நீதிபதி வள்ளிநாயகம், துணைத் தலைவர்கள் கவிஞர் வா.மு.சேதுராமன், மறைமலை இலக்குவனார் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

பொதுச் செயலர் மணிமேகலை கண்ணன் வரவேற்றார் தலை வராகப் பொறுப்பு வகித்த அவ்வை நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவரது படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, தமிழகப் புலவர் குழு புதிய தலைவராக விஅய்டி பல்கலைக்கழக வேந்தரும், தமி ழியக்க தலைவருமான கோ.விசுவநாதன் ஒருமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

கூட்டத்தில், நீதிபதி பாஸ்கரன், தொழிலதிபர் விஜிபி சந்தோஷம், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை ந.அருள், கி.அ.பெ.கதிரேசன், திரைப்பட தயாரிப் பாளர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் நாடு முழுவதும் இருந்து வந்திருந்த புலவர்கள், எழுத்தாளர்கள், பேரா சிரியர்கள் உள்பட சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment