திண்டுக்கல்,ஜூலை20 - திண்டுக்கல் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18.07.2023 அன்று மாலை 6 மணியளவில் திண்டுக்கல் வீரபாண்டியன் அலு வலகத்தில் நடைபெற்றது.
மாநகர மாநகர செயலாளர் த.கருணாநிதி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர் கழக செயல் பாடுகள் மற்றும் கழகப் பொறுப் பாளர்கள் தோழர்கள் செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்து உரையாற்றினார்.
மாவட்டத் தலைவர் இரா.வீர பாண்டியன் மாவட்ட செயலாளர் மு.ஆனந்த முனிராசன், தொழிற் சங்க பேரவை மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து உரை நிகழ்த் தினார்கள்.
மாநகரத் தலைவர் அ.மாணிக்கம் நிகழ்வுக்கு தலைமை ஏற்று உரையாற்றினார்.
மாவட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பழ. ராஜேந்திரன் பொன்ராஜ், கவிஞர் செல்வம் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் உரையாற் றினர்.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கியும் மாநகராட்சி பகுதி கழகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உருவாக்குவதின் நோக்கம் அதன் இறுதி இலக்கு அதனால் ஏற்படும் பயன்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் அயராத உழைப்பு, குறித்தும் உரை நிகழ்த்தினார்.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதி கழக புதிய பொறுப்பாளர்களை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அறிவித்தார்.
திண்டுக்கல் சுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார்.
6.7.2023 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை ஏற்று செயல் படுத்துவது எனவும், வைக்கம் போராட்ட நூற்றாண்டு கலைஞர் நூற்றாண்டு சிறப்பு தெருமுனை கூட்டங்களை திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடத்துவது எனவும், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் முடிவடைந்த விடுதலை சந் தாவை புதுப்பித்து புதிய சந்தாக் களை சேர்த்து வழங்குவது எனவும், திண்டுக்கல் மாநகராட்சிகளின் வார்டுகளில் கீழ்க்கண்டவாறு பகுதி கழகங்களை பிரித்து புதிய அமைப்புகள், பகுதி கழக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகர திராவிடர் கழகம்
மாநகரத் தலைவர் :அ. மாணிக்கம்
மாநகரச் செயலாளர் : த.கருணாநிதி
திண்டுக்கல் மாநகராட்சி 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்
1. திண்டுக்கல் நேதாஜி நகர்பகுதி திராவிடர் கழகம் (12வார்டுகள்)
வார்டு 1 முதல் 12வரை.
பகுதி கழக செயலாளர்: பே.கிருஷ்ணமூர்த்தி
2. திண்டுக்கல் குமரன் திருநகர் பகுதி திராவிடர் கழகம் (12வார்டுகள்)
வார்டு 13 முதல் 24வரை.
பகுதிக் கழக தலைவர்: மு. செல்வம்
பகுதி கழகச் செயலாளர்: எஸ். சுப்பிரமணியன்
3. திண்டுக்கல் பேகம்பூர் பகுதி திராவிடர் கழகம் (12 வார்டுகள்)
வார்டு 25 முதல் 36 வரை.
பகுதி கழக செயலாளர்: பழ.இராஜேந்திரன்
4. நாகல் நகர் பகுதி திராவிடர் கழகம்(12வார்டுகள்)
வார்டு 37முதல் 48 வரை.
பகுதி கழக செயலாளர்: ஜெபாஸ்டின் சின்னப்பர்
No comments:
Post a Comment