தமிழ்நாட்டில் 60,587 தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை அமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூலை 3- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் 60,587 தூய்மைப் பணியாளர்களுக்கு ஓராண்டுக்குள் முழு உடல் பரிசோதனை திட் டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத் தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் 60,587 நகர்ப்புற தூய் மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சென்னை கோடம்பாக்கம் மண்டலம் அண்ணா பிரதான சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர்அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திட்டத்தை சுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று (2.7.2023) தொடங்கி வைத்தார்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி:
நடப்பாண்டு மானிய கோரிக் கைக்குள் சுகாதாரத் துறையில் 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அனைத்து அறிவிப்புகளும் அடுத்த ஆண்டு மானிய கோரிகைக்குள் நிறை வேற்றப்படும்.
104ஆ-வது அறிவிப்பான தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் 60,587 நகர்ப்புற தூய்மைப் பணியாளர் களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் தொடங்கப் பட்டு உள்ளது.
ஓராண்டுக்குள் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர் மருத்துவ சிகிச்சைகள் தேவைப் படுவோருக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப் பட்டு உயர் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
உரிய சிகிச்சை அளிக்கப்படும்
அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும், அவர்களின் உடல் நலம் காக்க, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற தொற்றாநோய்கள், தோல் பிரச்சினைகள், ரத்த சோகை, எழும்பியல் நோய்கள், கண் நோய்கள், பற்சிதைவு, குடல் மற்றும் கருப்பை இறக்கம் மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்க ளுக்கு உரிய பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment