30.7.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉‘இந்தியா’ கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி உள்ளிட்டோர், மணிப்பூரில் நேரில் கள ஆய்வு. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினர்.
👉பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவர் ஆர்.கிருஷ்ணய்யா, எம்.பி.யை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர வேண்டுகோள்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉 பி.சி.சி.அய். தலைவராக இருக்கும் உங்கள் மகன் ஜெய் ஷா எந்த கிரிக்கெட் பந்தயத்தில் ஆடினார்? நான் தேர்தலில் போட்டியிட்டு வென்றவன், வாரிசு அரசியல் பேசிய அமித் ஷாவிற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி.
👉 திமுக அரசு அனைத்து மக்களுக்கும் நலத் திட்டங்கள் மூலம் நன்மை செய்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே இந்தியா கூட்டணியின் முதல் பணி என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "சமூகத்தின் பிளவுக்கு வெறுப்பின் நிகழ்ச்சி நிரல் முக்கிய காரணம்" என்று கூறினார்.
👉 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து கருத்து தெரிவித்து, வகுப்புவாத பகையை ஊக்குவித்த குற்றச் சாட்டில் வெளியீட்டாளர் பத்ரி சேஷாத்ரி கைது.
தி டெலிகிராப்:
👉பழங்குடியினத் தலைவர்கள் மன்றத்தின் தலைவர் பேகின் ஹாக்கிப் மற்றும் செயலர் முவான் டோம்பிங் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தில், மதவாத மோதலில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள், வடகிழக்கு மாநிலத்தில் அமைதி என்பது தொலைதூரக் கனவாகவே உள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை.
👉டில்லி மசோதா மீதான வாக்கெடுப்புக்கு முன்னால், மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஜனதா தளம் அய்க்கிய ஜனதா தளம் உத்தரவு பிறப்பித்துள்ளன.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment