மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி, பா.ஜ.க. படுதோல்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி, பா.ஜ.க. படுதோல்வி

கொல்கத்தா, ஜூலை 12 மேற்கு வங்காள ஊரக உள்ளாட்சி தேர்தலில் மம்தா கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. 2-ஆவது இடத்தில் பா.ஜனதா உள்ளது. நாளைதான் முழு முடிவுகளும் வெளியாகும் என்று தெரிகிறது.  மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஊராட்சி உறுப்பினர், ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 73 ஆயிரத்து 887 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. 5 கோடியே 67 லட்சம் வாக்காளர்கள் வாக் களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 2 லட்சத்து 6 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 80.71 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவின்போது வாக்குப்பெட்டி எரிப்பு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன் முறை சம்பவங்கள் நடந்தன. 17 பேர் பலியானார்கள். வன்முறை நடந்த 696 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் (10.7.2023) மறுவாக்குப் பதிவு நடந்தது.

இந்நிலையில், நேற்று (11.7.2023) வாக்கு எண்ணிக்கை நடந்தது. 22 மாவட்டங்களில் 339 மய்யங்களில் காலை 8 மணிக்கு பலத்த பாது காப்புடன் அப்பணி தொடங்கியது. மய்யங்களுக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந் தது. ஆயுதம் தாங்கிய மத்திய படையினரும், மாநில காவல் துறை யினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆரம்பகட்ட முடிவுகள் வெளியாக தொடங்கிய நிலையில், ஆங்காங்கே திரிணாமுல் காங்கிரசாருக்கும், பா.ஜனதாவின ருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகளின் முகவர் களை வாக்கு எண்ணிக்கை மய்யத் துக்குள் நுழைய விடாமல் திரிணா முல் காங்கிரஸ் தடுப்பதாகவும், வெடிகுண்டு வீசுவதாகவும் எதிர்க் கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார். ஆனால், தோல்வி உறுதி ஆகிவிட்டதால், பா.ஜனதா பழி போடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் மறுத்தது.   

மாலை 5.30 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 63 ஆயிரத்து 229 ஊராட்சி உறுப்பினர் இடங்களில், 23 ஆயிரத்து 344 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. அவற்றில், 16 ஆயிரத்து 330 இடங்களில் திரிணா முல் காங்கிரஸ் வெற்றி பெற்றி ருந்தது. 3 ஆயிரம் இடங்களில் முன்னிலையில் இருந்தது. பா.ஜனதா 3 ஆயிரத்து 790 இடங் களிலும், இடதுசாரி கூட்டணி 1,365 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 886 இடங்களிலும் வெற்றி பெற்றிருந் தன. மொத்தம் உள்ள 928 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களில், 18 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. 18 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி இருந்தது. எனவே, இத்தேர்தலில் அக்கட்சி பலம் நிறைந்த வெற்றி பெற்றுள்ளது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்ததால், வாக்கு எண்ணிக்கை முடிவடைய இன்னும் 2 நாட்கள் ஆகும் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறி னார். இதனால், வியாழக்கிழமை தான் முழு முடிவுகளும் வெளியாகும் என்று தெரிகிறது.


No comments:

Post a Comment