சென்னை,ஜூலை9 - தமிழ் நாட் டில் பருத்தி கொள்முதலை உட னடியாக தொடங்குவதுடன், குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1ஆம் தேதி முதல் நடை முறைக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடி தம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது:
பருத்தியின் விலை நடப்பு அறு வடைப் பருவத்தில், கடும் வீழ்ச்சி யடைந்துள்ள சூழ்நிலையில், தமிழ் நாட்டில் பருத்தி விவசாயிகள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலை குறித்து தங்களின் கவனத் துக்கு கொண்டுவருகிறேன்.
பருத்தி விலை சரிவு
கடந்த ஆண்டு பருத்தி விவசாயிகள், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் என்ற வீதத்தில் பருத்தியை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்ட முடிந்தது. அதனால் உற்சாக மடைந்த பெரும்பாலான விவசாயிகள், இந்த ஆண்டும் பருத்தி சாகு படியைத் தேர்வு செய்தனர். இந்நிலையில், தற்போது பருத்தி யின் விலை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500 என கடுமையாக சரிந் துள்ளது. இதனால், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி யுள்ளனர்.
வேளாண் விளைபொருட் களின் சந்தை விலையை நிலைப் படுத்துவதில், ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை முக் கியப் பங்கு வகிக்கிறது. தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய பருத்திக் கழகத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் நடவடிக்கைகள் பருத்தி விலையை நிலைப்படுத் துவதற்கு பெரிதும் உதவியாக இருந்து வந்தது.
ஒன்றிய அரசு 2023-_2024ஆ-ம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆத ரவு விலையாக நடுத்தர இழை பருத்திக்கு குவிண்டால் ரூ. 6,620 எனவும், நீண்ட இழை பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,020 என்றும் நிர்ணயித்துள்ளது.
பருவங்களில் சாகுபடி
தமிழ்நாட்டில் பருத்தி சாகு படிக்கு நஞ்சை தரிசு, கோடை இறவை என இரண்டு தனித்துவ மான பருவங்கள் உள்ளன. அதன் படி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விதைப்பு செய்யப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் இருந்து பருத்தி அறுவடை செய்யப்படுகிறது. இந்த இரண்டு பருவங்களிலும் 84 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது நஞ்சை தரிசு பருத்தி அறுவடை முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பருத்தி விவசாயிகள், பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500 ஆகக் குறைந்துள் ளதை கருத்தில்கொண்டு, தமிழ் நாட்டில் பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய பருத் திக் கழகம் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலையை இனி ஜூன் 1ஆம் தேதியில் இருந்து அமல்படுத்தும் படியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பருத்தி கொள் முதலை உடனடியாகத் தொடங்க இந்திய பருத்திக் கழகத்துக்கு உத் தரவிட வேண்டும். பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை இனிவரும் காலங்களில் ஜூன் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவர வேளாண்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
உரிய நிவாரணம் கிடைக்க
பருத்தி விலையை நிலைப்படுத் துவதன் மூலமும், விவசாயிகளுக்கு அவர்கள் விளைவித்த விளை பொருட்களுக்கு நியாயமான வரு மானத்தை உறுதி செய்வதன் மூல மும், மாநிலத்தில் பாதிக்கப்பட் டுள்ள பருத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும். பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை இனிவரும் காலங்களில் ஜூன் 1 முதல் நடை முறைக்குக் கொண்டுவர வேளாண் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment