சென்னை, ஜூலை 1- பேட்டரி, மெத்தனால் மற்றும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை, போக்குவரத்து வாகனங்களாக இயக்க, அனுமதி கட்டணம் செலுத்து வதில் இருந்து, தமிழ்நாடு அரசு விலக்கு அளித்துள்ளது.
பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனம்; மெத்தனால், எத்தனால் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படும் வாகனங்கள் போன்றவற்றை, அனுமதி கட்டணம் செலுத்தாமல் இயக்க அனுமதிக்க கோரி, போக்குவரத்து ஆணையர் அரசுக்கு கடிதம் எழுதினார்.
அதை பரிசீலனை செய்த அரசு, பேட்டரி, மெத்தனால் மற்றும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களில், சரக்கு வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்களை, போக்கு வரத்து வாகனங்களாக இயக்கும்போது, அனுமதிக் கட்டணம் செலுத்தாமல் இயக்க, அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, உள்துறை செயலர் அமுதா வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment