ராணிப்பேட்டை, ஜூலை 31- ஊழல் மிகுந்த கட்சி என்ற அமித்ஷாவின் கருத்து தி.மு.க. மீது சேற்றை வாரி இறைப் பது போல் உள் ளது என்று அமைச் சர் துரைமுருகன் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் உள்ள தனியார் விடுதியில், தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்த லுக்கு முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த கட்சி தி.மு.க. என்ற அமித்ஷாவின் கருத்து அவரது தரத்திற்கு உகந்த பேச்சு அல்ல. இந்த குற்றச்சாட்டு தி.மு.க.வின் மீது சேற்றை வாரி இறைப்பது போல் உள்ளது. பொத்தாம் பொதுவாக ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை பாரதீய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர். அப்படி பார்த்தால் அவர்கள் கட்சியில் எத்தனை பேர் ஊழல் செய்திருக்கிறார்கள் என பட்டியல் போட்டுத்தர நாங்களும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment