இந்தியாவில் முடிவிற்கு வந்தது கரோனா ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

இந்தியாவில் முடிவிற்கு வந்தது கரோனா ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு

புதுடில்லி, ஜூலை 27 ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது "நாட்டில் மிக குறைந்த அளவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தொற்றுநோய் முடிந்துவிட்டது என்றே கருதலாம். கரோனா ஆபத்து முடிவுக்கு வந்துவிட்டது" என கூறினார்.

 தொடர்ந்து பேசிய அவர், "அதே சமயம் மக்கள் தங்கள் பாதுகாப்பை குறைக்க வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல. இப்போதைக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment