பின்லாந்து விஞ்ஞானிகள், காளான் மூலம் செயற் கைத் தோலை உருவாக்குவதில் வெற்றிகண்டுள்ளனர். சில தாவரங்களை வைத்து தோலைப் போன்ற பொருளை தயாரிக்கும் தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக வெளிவரத் தொடங்கியுள்ளது.
பின்லாந்திலுள்ள வி.டி.டி., தொழில்நுட்ப ஆராய்ச்சி மய்யத்தின் விஞ்ஞானிகள், காளான் மற்றும் பூஞ்சை களிலிருந்து தோல் போன்றே ஒரு பொருளை தயாரிக்க முடியும் என நிரூபித்துள்ளனர்.
காளான் தோலைத் தொட்டால் நிஜமான விலங்குத் தோலைத் தொடுவது போன்ற உணர்வைத் தருவதுடன், பலவித சாயங்களில் அதை தோய்த்து எடுத்து அசத்த வும் முடியும்.
பிரமாண்டமான உயிரிக் கலன்களில், பூஞ்சைகள் மற்றும் காளான்களை விஞ்ஞானிகள் நொதிக்க வைக் கின்றனர். இத்தகைய திரவ நொதித்தல் முறையில் காளான்களை பதப்படுத்துவதன் மூலம், பெரிய அளவில் செயற்கைத் தோல் உற்பத்தியைச் செய்ய முடியும் என்று பின்லாந்து விஞ்ஞானிகள் காட்டி யுள்ளனர்.
இதனால், துணி போல நீண்ட தோல்களை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்ய முடியும். இயற்கையான விலங்குத் தோலினை துண்டு துண்டாகவே பதப்படுத்தி தயாரிக்க முடியும். ஆனால், செயற்கையாக தயாரிக்கப் படும் தோலை விரயமாகாமல், பல பொருட்களை தயாரிக்க உதவும்.
மேலும், காளான் தோலை தயாரிக்க எந்த விலங்கும் கொல்லப்படுவதில்லை. தவிர, நச்சுள்ள வேதிப் பொருட்களைக் கொண்டு பதப்படுத்தும் தேவை இல்லை. இதனால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இருக்காது.
No comments:
Post a Comment