வலைதளங்களில் ஜாதி, மத வன்மங்கள் பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை அவசியம் சட்டம் - ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

வலைதளங்களில் ஜாதி, மத வன்மங்கள் பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை அவசியம் சட்டம் - ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு

சென்னை, ஜூலை.12- சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (11.7.2023) நடந்தது. அப்போது சமூக அமைதியை கெடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கூட்டத்தில் தலைமை செய லாளர் சிவதாஸ் மீனா, காவல்துறை காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

அமைதி பூங்கா

இந்த ஆய்வு கூட்டத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஆய்வு கூட் டமாக இது ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. சட்டம் -_ ஒழுங்கு பிரச்சினை என்று சொல்வதால் ஏதோ நிறைய பிரச்சினைகள் இருப்பதாக நீங்கள் கருத தேவையில்லை. சட் டம் - ஒழுங்கானது பெரிய அளவில், பிரச்சினைக்குரியதாக இல்லை என்பதுதான் நம்மையும், மக்க ளையும் மகிழ்விக்கும் செய்தி.

ஒரு அரசு நல்லரசாக செயல்படுவதற்கு சட்டம் - ஒழுங்கு முறையாக நிலை நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு இன்று அமைதிப் பூங் காவாக திகழ்வதற்கு முக்கியமான காரணம், சட்டம் ஒழுங்கிற்கு அரசு கொடுத்து வரக்கூடிய முக்கியத் துவம்தான். அதற்கு அடையாளம் தான், கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள். நிம்மதியும், அமைதியும் இருக்கும் மாநிலத்தில் தான் நினைத்த திட்டங்களை செயல்படுத்த முடியும். அந்த வகையில் மிக மிக நிறைவான காலமாக இந்த 2 ஆண்டு காலம் அமைந்துள்ளது. 

காவல்துறையின் செயல்பாடுகள் மிக மிக திருப்திகரமாக உள்ளது. என்றாலும், அடுத்து வரும் ஓராண்டுகாலம் நமக்கு மிகவும் முக்கியமானதாகும். இக்காலத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் மேலும் சிறப்பாக அமைவதற்கு நீங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் கண்டறியப் பட்டவுடன் முறையாக முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண் டும். எக்காரணத்தை கொண்டும் அவை மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் வண்ணம் பெரிய நிகழ்வுகளாக உருமாறுவதை தவிர்க்க வேண்டும். அடுத்த ஓராண்டு காலத்திற்கு மக்களை பாதிக்கும் எந்த ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வண்ணம் உறுதி செய்ய வேண்டும். நாடா ளுமன்ற தேர்தல் வர இருப்பதால், மிகமிக எச்சரிக்கையுடன் காவல் துறை அதிகாரிகள் அனைவரும் செயல்படவேண்டும். குற்றம் சாட் டப்பட்டவர்கள் காவல் நிலை யத்தில் விசாரிக்கப்படும்போது, கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். அவர்களை எந்த விதத் திலும் துன்புறுத்தக்கூடாது. காவல் மரணங்கள் முழுமையாக தடுக் கப்பட வேண்டும். 

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு

பெண்கள் மற்றும் குழந்தை களின் பாதுகாப்பில் அரசு எப்போ துமே சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் பெண் குழந்தைகள் அதிகமாக பள்ளிக்கும், கல்லூரிக் கும் சென்று வருகிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்களும் நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறார்கள். 

கல்விக் கூடங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாது காப்பை உறுதி செய்வது நம்முடைய தலையாய கடமை. பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் இருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளி களை சட்டத்தின்முன் நிறுத்தி அவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். 

கள்ளச்சாராயம் - கண்காணிப்பு நடவடிக்கை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த விரும்பத் தகாத நிகழ்வுகளால் சில உயிரி ழப்புகள் ஏற்பட்டன. என்னுடைய அறிவுரையின்பேரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் கடும் நடவடிக்கைகளால், தற்போது கள்ளச்சாராயம் காய்ச் சுதல் மற்றும் விற்பனை செய்தல் வெகுவாக குறைந்துள்ளன. இந்த நிலைதொடர, தொய்வின்றி கண் காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக அகற்று தலை உறுதி செய்திடவேண்டும்.

இது குறித்து வாரம்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி கண் காணிக்க வேண்டும். மக்களிடம் இருந்து பெறும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்போது நடுநிலைமை தவறாமல் இருத்தல் வேண்டும். புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு விருப்பு - வெறுப்பு இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக் காமல், அங்கேயே பேசி முடித்துக் கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். 

போதை மருந்து நடமாட்டத்தை தடை செய்க

போதை மருந்து நடமாட்டத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். போதை என்பது அதை பயன்படுத்தும் தனிமனிதரின் பிரச்சினை அல்ல. அது சமூகப் பிரச்சினை. போதை என்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். போதைதான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டு தலாக இருக்கிறது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போதை மருந்து களை பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் தங்களது மாவட்டத்துக்குள் போதை விற்பனையை முற்றிலுமாக தடை செய்து விட்டேன் என்று மார்தட்டிச் சொல்லும் அளவுக்கு அதை கட்டுப்படுத்த வேண்டும். 

முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

ஜாதி, மத ரீதியான மோதல் களைத் தடுப்பது ஒரு பக்கம் என்றால், சமூக இணையதளங்களின் மூலமாக ஜாதி, மத ரீதியான வன் மங்களைப் பரப்புவர்கள் அதிகமாகி வருகிறார்கள். அவர்களைக் கண் காணிக்க வேண்டும். அவர்கள்தான் சமூக அமைதியைக் கெடுக்கக் கார ணமாக இருக்கிறார்கள். அவர் களால் அப்பாவிகள் பாதிக்கப் படுவார்கள். ஆனால் சொகுசாக உட்கார்ந்து கொண்டு இது போன்ற வன்மங்களை விதைப்பவர்கள் தப்பி விடுவார்கள். இப்படி நச்சுக்கருத்துகளை பரப்புவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு காவல்துறை என்பது நடந்த குற்றங்களை கண்டுபிடிக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் துறையாக செயல்பட வேண்டும். கடந்த ஆண்டை விட, கடந்த மாதத்தைவிட, குற்றம் குறைந்திருக் கிறது என்கிற புள்ளிவிவரம் வேண் டாம். குற்றமே நடைபெறவில்லை என்ற முற்றுப்புள்ளி விவரம்தான்  தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment