நிலவை ஆய்வு செய்யும் நிலவுக்கலன் சந்திரயான் ஜூலையில் விண்ணில் பாய்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

நிலவை ஆய்வு செய்யும் நிலவுக்கலன் சந்திரயான் ஜூலையில் விண்ணில் பாய்கிறது

சென்னை, ஜூலை 1-  இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண் கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22ஆ-ம் தேதி சிறீஅரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்டப் பயணங்களுக்கு பின்னர் சந்திரயான்-2 2019 செப் டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது.

எனினும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி `லேண்டர் கலன்' தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற் றொரு பகுதியான `ஆர்பிட்டர்' நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றி கரமாக நிலைநிறுத்தப்பட்டது. தற்போது ஆர்பிட்டர் நிலவை சுற்றிவந்து, ஆய்வு செய்துவருகிறது.

இதற்கிடையே, சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த 2020இ-ல் இஸ்ரோ முடிவு செய்தது.

ஏற்கெனவே ஆர் பிட்டர் நில வைச் சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டும் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டு களாக இதற்கான பணிகளில் அறிவியல் ஆய்வாளர் கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 2-ஆவது வாரம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. 

அதன்படி, சந்திரயான்-3 விண் கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக் கெட் மூலம் ஜூலை 13-ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதுகுறித்து இஸ்ரோஅறிவி யல் ஆய்வாளர்கள் சிலர் கூறும் போது, "ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கும் சந்திரயான்-3' விண் கலம் ஜூலை 13ஆ-ம் தேதிவிண் ணில் செலுத்தப்பட உள்ளது. 

இதற்காக, சந்திரயான்-3 விண் கலம் கடந்த மே இறுதியில் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத் துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விண்கலத்தை ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. 

இறுதிக்கட்ட சோதனைகள் நிறைவடைந்த பின்னர், ஏவுதளத் துக்கு ராக்கெட் கொண்டு செல்லப் படும். அதேபோல, கடந்த முறை ஏற்பட்ட தோல்வியை அடிப்படை யாகக் கொண்டு லேண்டர் மற்றும் ரோவர் கலன்களில் அதிநவீன வசதிகளுடன், பல்வேறு மாற்றங் கள் செய்யப்பட்டுள்ளன" என் றனர்.

No comments:

Post a Comment